Kathir News
Begin typing your search above and press return to search.

தனக்கு வலிமையை கொடுத்தது பகவத்கீதையின் போதனைகள் தான் - கீதையை கொண்டாடும் இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்

மிகக் கடினமான நேரங்களில் எனக்கு வலிமை கொடுத்தது பகவத்கீதை களின் போதனைகள் தான் என்று இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர் கூறுகிறார்.

தனக்கு வலிமையை கொடுத்தது பகவத்கீதையின் போதனைகள் தான் - கீதையை கொண்டாடும் இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 Aug 2022 4:02 AM GMT

இங்கிலாந்தில் பிரதமர் தேர்தல் இறுதிகட்டத்தை தற்போது நெருங்கிக் கொண்டிருக்கின்றது தேர்தலில் இறுதி சுற்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி, மற்றும் அமைச்சர் லிஸ்ட் டிரஸ் ஆகிய இருவருக்கும் இடையில் இந்த தேர்தலில் கடுமையான போட்டிகள் நிலவி வருகின்றன. இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதால் பல்வேறு பகுதிகளில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை இங்கிலாந்து பிரதமர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி அவர்கள் பரபரப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று அங்குள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு சென்ற ரிஷி சுனக் தன் மனைவி அக்‌ஷதாவுடன் வழிபாடு செய்தார்.


கிருஷ்ணரை வழிபாடு செய்த பிறகு மக்களுடன் அவர் உரை நிகழ்த்தினார். இந்த உரையில் தான் தனக்கு கடினமான வேலைகளில் பகவத்கீதை மிகவும் உதவியாக இருந்ததாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். பகவத் கீதையின் போதனைகள் மக்களுக்கு மிகவும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்து மக்கள் அனைவரும் இதனை தங்களுடைய பூஜை அறையில் வைத்து, வணங்க கூடிய மிகச்சிறந்த பொக்கிஷமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோயில் சார்பாக கிருஷ்ணர் படங்கள் அடங்கிய புத்தகம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு போராட்டங்கள் நிறைந்ததாகவும், எப்பொழுதும் பரபரப்பான சூழ்நிலையில் தன்னுடைய மனைவி பகவத்கீதையின் போதனைகளை தன்னுடைய செல்போன் மூலமாக தனக்கு அனுப்புவார். அதன் மூலமாக தனக்கு வலிமை கிடைத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். பகவத் கீதையில் சொல்லப்படாத விசயங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy:Junior Vikatan News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News