விரைவில் இந்தியர்கள் இ-பாஸ்போர்ட் பெறுவார்கள்: அமைச்சகம் தகவல்!
விரைவில் இந்தியாவில் இ-பாஸ்போர்ட் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
By : Bharathi Latha
வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் உள்ள 36 பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் இனி இந்தியக் குடிமக்களுக்கான இ-பாஸ்போர்ட் வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று உள்ளது. இ-பாஸ்போர்ட் என்பது அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய பயோமெட்ரிக் முறையில் செயல்படும் என்றும் கூறப்படுகிறது இதன் மூலம் குடிமக்கள் இந்தியாவில் இருந்து உலக அளவில் எந்த ஒரு நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளும் பொழுது விரிவான தகவல்களை அவர்கள் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலர் சஞ்சய் பட்டாச்சாரியார் குறிப்பிடுகையில், " இந்தியா தற்பொழுது இந்திய குடிமக்களுக்காக அடுத்து இ-பாஸ்போர்ட் பயோமெட்ரிக் முறையில் அறிமுகப்படுத்த உள்ளது. இது மிகவும் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட உள்ளது என்பதையும்" அவர் குறிப்பிட்டுள்ளார். இ-பாஸ்போர்ட் தொடர்பான செய்முறை விளக்கங்களும் தற்பொழுது நல்ல முடிவுகளை பெற்றுள்ளனர். சிப் உடன் கூடிய பாஸ்போர்ட்கள் உரிய பாதுகாப்பை வழங்கும்.
மேலும் ஆவணங்கள் திருட்டு போவது மோசடிகள் போன்றவற்றில் இருந்து தங்களைப் பாதுகாக்க இது உதவியாக இருக்கும். அரசின் வலைதளங்களில் இதுதொடர்பாக விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் 2022ஆம் ஆண்டில் இருந்து பாஸ்போர்ட் பெறுபவர்களுக்கு இந்த முறையில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அது தொடர்பான விரிவான தகவல்களை அறிந்து கொள்வதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வமான வலைத்தளங்களில் பார்வையிடலாம்.
Input & Image courtesy: Economic times