இந்தியர்களுக்கு கிரீன் கார்டு பெறுவதில் கொண்டுவந்த புதிய தளர்வு !
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கிரீன் கார்டு பெறுவதில் கொண்டுவந்து புதிய தளர்வுகள்.
By : Bharathi Latha
அமெரிக்காவில் ஜோ பைடன் அவர்களின் ஆட்சிக்கு வந்த நாள் முதல் விசா மற்றும் குடியுரிமை விதிகளில் இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வெளிநாட்டவர்களுக்குப் பெரிய அளவிலான உதவிகளைச் செய்து வருகிறது. இதில் மிகவும் முக்கியமாக H1P விசா கட்டுப்பாடுகளை, படிப்படியாக ஜோ பைடன் அரசு நீக்கி பழைய முறைகளை மீண்டும் அமலாக்கம் செய்தது. இதன் மூலம் அதிகளவில் அமெரிக்க நிறுவனங்களும் வெளிநாட்டு மக்களும் நன்மை அடைந்தனர்.
தற்போது அனைத்திற்கும் மேலாகக் கிரீன் கார்டு அதாவது அமெரிக்காவின் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கு வெளிநாட்டவர்களுக்கு மிகப்பெரிய சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பல லட்சம் இந்தியர்கள் பெரிய அளவில் நன்மை அடைய உள்ளனர். மேலும் இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, வேலைவாய்ப்பு மூலம் கிரீன் கார்டு பெற விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் சினீயாரிட்டி அடிப்படையில் தகுதியானவர்களை ஆய்வு செய்து கிரீன் கார்டு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் பணிகளை இன்னும் வேகப்படுத்த புதிய திட்டத்தை அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ளது.
அமெரிக்க அரசு கிரீன் கார்டு விசா விண்ணப்ப வரிசையில் முன்னுக்குச் செல்ல 5000 டாலர் என்ற தொகையைச் சூப்பர் கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளது. இந்தச் சூப்பர் கட்டணம் இந்தியர்களுக்கு ஜாக்பாட் ஆக உள்ளது. இந்தக் கட்டணம் மூலம் H1P விசா பெற்று கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்துள்ளவர்கள் விரைவாக அமெரிக்கக் குடியுரிமை பெற முடியும். 7 சதவீத கட்டுப்பாடு அமெரிக்க அரசு ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதத்திற்கு அதிகமாக விசா அளிக்கக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு வருடமும் 1.40 லட்சம் விண்ணப்பத்தை ஒதுக்கி வைத்து வருகிறது. இந்தச் சூப்பர் கட்டணம் மூலம் ஒதுக்கிவைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் தகுதியான அனைவரும் கிரீன் கார்டு பெறலாம்.
Input & image courtesy:NDTV