இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட 4வது நபர்: அறிகுறிகள் இல்லாத பாதிப்பு !
இந்தியர்கள் அறிகுறிகள் இல்லாத ஓமிக்ரான் வைரஸ்க்கு நான்காவது நபர் பாதிக்கப்பட்டுள்ளார்.
By : Bharathi Latha
உலக அளவில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் ஓமிக்ரான் என்ற பெயரில் அழைக்கப் படுகின்றது. ஆனால் இதுவரை இந்தியாவில் இது குறித்து அதிகமாக பாதிப்பை ஏற்படுத்த வில்லை. இருந்தாலும் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் மூலமாக இது பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இத்தகைய ஒரு சூழலில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் மூலமாக இதுவரை நான்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவிலிருந்து துபாய் மற்றும் டெல்லி வழியாக மும்பைக்கு பயணம் செய்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 33 வயது நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டது.
மேலும் அதில் அவர் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் கடல் பொறியாளராக பல மாதங்களாக கடலில் இருந்ததால் அவர் எந்த Covid-19 தடுப்பூசியையும் எடுக்கவில்லை. மேலும் அவர் தடுப்பூசி எடுக்காததும் இந்த வைரஸ் தொற்றுக்கள் ஒரு முக்கிய காரணமாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நவம்பர் 24 அன்று அவர் மும்பையில் தரையிறங்கிய பிறகு லேசான காய்ச்சல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு கல்யாண்-டோம்பிவலியில் உள்ள கோவிட் பராமரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தியாவில் மற்ற வர்கள் பெங்களூரைச் சேர்ந்த 46 வயதான முழு தடுப்பூசி செலுத்திக்கொண்டு மருத்துவரும் ஒருவர் .அவருக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலியின் அறிகுறிகளை உருவாக்கியது மற்றும் 66 வயதான தென்னாப்பிரிக்க சேர்ந்த ஒருவருடன் இந்தியாவுக்கு வந்தார். மேலும் இவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது காரணம் நோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வேகமாக பரவி அதன் மூலமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட இவருக்கும் அதன் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Input & Image courtesy:NDTV News