இந்திய மூவர்ணக் கொடியின் ஒளியினால் மிளிர்கின்ற உலக சுற்றுலா தளங்கள் !
இந்தியாவின் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக பல நாடுகளின் சுற்றுலா இடங்கள் மூவர்ணத்தில் ஒளிர வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், உலகெங்கிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள் இந்தயாவின் 75-வது சுதந்திர தின விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து வந்தது. இதன்படி நேற்று அமெரிக்க, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட பல முக்கிய நாடுகளில் 75 மதிப்புமிக்க கட்டிடங்கள் மற்றும் சுற்றுலா தளங்களில் ஆகஸ்ட் 15 மாலை முதல் ஆகஸ்ட் 16 காலை வரை இந்திய மூவர்ணத்தின் வெளிச்சத்தில் பிரகாசிக்கின்றன. சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இந்த நடவடிக்கை இருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பாக அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டடம், மேலும் உலகப் புகழ் பெற்ற நயாகராவின் அலைகள் கனாடாவில் உள்ள நீர்வீழ்ச்சியும் மூவர்ணத்தில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூவர்ண விளக்குகளால் ஒளிரும் முக்கிய கட்டிடங்களில் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம், US உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடடம், துபாயில் உள்ள புர்ஜ் கலீபா, ரஷ்யாவின் பரிணாம கோபுரம் அபுதாபியில் உள்ள புகழ் பெற்ற அட்னோக் குழு கோபுரம், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்தின் பர்மிங்காமின் புகழ்பெற்ற நூலகக் கட்டிடம் ஆகிய கட்டிடங்கள் இதில் அடக்கும்.
எனவே இத்தகைய கட்டிடங்களில் இந்திய தேசிய கொடியின் நிறங்கள் பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக மிளிர்ந்து. இந்தியாவின் சுதந்திர வரலாற்றோடு தொடர்புடைய பெருமை தருணங்களை நினைவு கூறுவதே இதன் நோக்கம், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் முழு ஆர்வத்துடன் இத்தகைய கட்டிடங்களை காண்பதற்கு கூட்டம் கூட்டமாக வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Image courtesy: Gulftoday news