Kathir News
Begin typing your search above and press return to search.

ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய 14 இந்தியர்களை அதிரடியாக மீட்ட இந்திய தூதரம்!

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடமிருந்து இந்தியர்கள் மொத்தமாக இந்திய மாலுமிகள் உட்பட 14 பேர் வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய 14 இந்தியர்களை அதிரடியாக மீட்ட இந்திய தூதரம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 April 2022 2:25 AM GMT

கடல் பயணம் என்பது பல்வேறு சிக்கல்களையும் கொண்டுள்ளது என்பதை நாம் அறிந்ததே. அந்த வகையில் பல்வேறு கிளர்ச்சியாளர்களும் ஆங்காங்கே செல்லும் கப்பல்களை நிறுத்தி உள்ளூர் மக்களை நாட்டில் வேளை கைது செய்து அடைத்து வைக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணம் செய்த இந்திய கப்பல் ஒன்றில் இரண்டு மாலுமிகள் உட்பட 14 பெயரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சிறைபிடித்து வைத்துள்ளார்கள். இந்தியாவைச் சேர்ந்த சரக்கு கப்பலான Rwabee இன்று கப்பல்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சிறை பிடித்து வைத்துள்ளார்கள். மேலும் இந்த கப்பலில் இந்தியாவைச் சேர்ந்த 14 பேர் மற்றும் மாலுமிகள் உட்பட இரண்டு பேரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் இந்திய அரசாங்கம் இவர்களை பத்திரமாக மீட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் மீட்கப்பட்ட நபர்கள் அனைவரும் நகரில் உள்ள ஸ்கட் என்ற இடத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது எனவே பேச்சுவார்த்தையின் மூலம் இத்தகைய மீட்பு சாத்தியமானது என்றும் ஓமன் நகரத்திற்கான இந்திய தூதர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy: Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News