Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் இந்தியா வசமாகிறதா கச்சதீவு? இலங்கை மீனவர்கள் லீக் செய்த தகவல்!

மீண்டும் இந்தியா வசமாகிறதா கச்சதீவு? இலங்கை மீனவர்கள் லீக் செய்த தகவல்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 May 2022 10:58 AM IST

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இ ந்தியாவிடம் ஒப்படைக் கும் முயற்சிகள் நடந்து வருவதா க இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ம ன்னார் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித் த மீனவர் ச ங்க பிரதிநிதிகள், க ச்சத்தீவுப் பகுதி இந்தியாவுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட இருப்பதாக ஊடகங்கள் வாயிலாகவும், மன்னார் மாவட்ட மீனவர்கள் மூலமாகவும் எங்களுக்குத் தெரியவந்தது.

இதன் உண்மைத்தன்மை மீ னவர் கூ ட்டுறவுச் சங்கங்களின் த லைவர்களான எங்களுக் கே இன்னும் தெ ரியாது. இலங்கையில் ஏற்பட்டிருக்கிற பொருளாதார நெருக்கடியைப் ப யன்படுத்தி இந்த அ ரசாங்கத்தில் கடந் த கா லத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களின் த ன்னிச்சையான செயல்பாட்டினால், கச்சத்தீவை குத்தகைக் கு விடுவது தொடர்பாக இ ந்தியாவிடம் பே சப்பட்டுக் கொண்டிருக்கலா ம் என்ற ஐயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் இலங்கை பிரதம ர் இந்த கச்சத்தீவு விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி இ றையாண்மையை விட்டுக்கொடுக்காம ல் பாதுகாக்க வேண்டும் எனத் தெ ரிவித்தனர்.

Inputs From: News 7


Next Story
கதிர் தொகுப்பு
Trending News