Kathir News
Begin typing your search above and press return to search.

விவாகரத்துப் பெற்ற பெண்களை NRI போல் நடித்து ஏமாற்றி நபர் கைது!

விவாகரத்துப் பெற்ற பெண்களிடம் NRI போல் நடித்து ஏமாற்றி நபர் கைது.

விவாகரத்துப் பெற்ற பெண்களை NRI போல் நடித்து ஏமாற்றி நபர் கைது!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  31 Dec 2021 2:16 PM GMT

வெளிநாட்டில் வேலை பார்க்கும் NRI போல் நடித்து, விவாகரத்து பெற்ற பெண்களை திருமணம் செய்துகொள்வதாகவும், விசா ஏற்பாடு செய்து தருவதாகவும் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர். டெல்லியை சேர்ந்த குல்தீப் சிங் என்ற நபர் தான், வெளிநாட்டு வேலை பார்க்கும் திருமணமாகாத நபர் போல் நடித்து விவாகரத்து ஆன பெண்களை தேர்வு செய்து மோசடி செய்துள்ளார். மேலும் இதுவரை 50க்கும் மேற்பட்ட பெண்கள் இவரிடம் ஏமாற பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக பாஸ்சிம் விஹாரைச் சேர்ந்த பெண் ஒருவர், காவல் நிலையத்தை அணுகிய பின்னர் இந்த விஷயம் செப்டம்பர் மாதம் வெளிச்சத்திற்கு வந்தது என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி துணை போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் தியாகி கூறுகையில், "வழக்கை விசாரிக்கும் குழு அமிர்தசரஸில் சர்மாவை கண்டுபிடித்து டிசம்பர் 21 அன்று கைது செய்தது. அவரிடம் இருந்து மீட்கப்பட்ட மொபைல் போனில் ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் புகார்தாரரின் பாஸ்போர்ட் விவரங்கள் இருந்தன.


விசாரணையின் போது, ​​ஷர்மா திருமண தளங்களில் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களைப் பார்த்து ஒரு NRI போல் உரையாடலைத் தொடங்கினார். அவர் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற அவர், விசா பெறுவதாகக் கூறி அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் பிற விவரங்களைச் சேகரிப்பார். அதன்பிறகு, அவர் அவர்களிடம் செயல்முறை சிக்கலில் உள்ளதாகக் கூறி, அதைச் சரிசெய்வதற்கு அவர்களிடம் பணம் கேட்டார். இதுபோன்ற செய்மறையை பயன்படுத்தி ஒவ்வொரு பெண்களிடமும் பணத்தை இவர் கையாண்டு உள்ளார்" என்று தியாகி மேலும் கூறினார்.

Input & Image courtesy: Times of India




Next Story
கதிர் தொகுப்பு
Trending News