முதுகலை மருத்துவப்படிப்பு நீட் தேர்வு: நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?
முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?
By : Bharathi Latha
தற்போது முதுகலை தகுதித் தேர்வுக்கான அனுமதி சீட்டு இன்று முதல் தேசிய மருத்துவக் அறிவியல் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் தன்னுடைய ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதற்கு பல்வேறு செய்திகளும் வெளியாகி வருகின்றன இணையதளம் மூலமாகத்தான் பதிவிறக்கம் செய்ய முடியும். விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதிச் சீட்டினை https://nbe.edu.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தேர்வு தேதி அவனது மேல் இருபத்தி ஒன்றாம் தேதி காலை 9 மணிமுதல் 12:30 வரை இத்தேர்வு நடைபெறும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இத்தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரம் இதற்கான அவகாசம் தரப்படுகிறது. ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம். முதலில் விண்ணப்பதாரர்கள் தனக்கு கொடுக்கப்பட்ட தனித்துவமான பதிவு கணக்கை கடவுச்சொல் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பயன்படுத்தி தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள இணையதளத்தில் முதலில் சென்று உங்களுடைய விவரங்களை பதிவிட வேண்டும். பதிவு செய்த பின்னர் குறுந்தகவல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பதிவுக் கணக்கு எண் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும்.
மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது குறுந்தகவல் மூலமாகவும் வெளியான பதிவு எண்ணை வைத்து மேலும் ஒருவருடைய பிறந்த தேதி தொடர்பான தகவல்களை கொடுப்பதன் மூலம் பதிவிறக்கம் செய்ய முடியும். எனவே அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமும் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தடுப்பதற்காக விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட கால அளவிற்குள் தங்களுடைய அனுமதிச்சீட்டை பதிவு செய்து கொள்வது அவசியம்.
Input & Image courtesy: News 18