Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய ராணுவத்தின் புதிய தளபதி நியமனம் - யார் இந்த மனோஜ் பாண்டே

இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டேவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தர விட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் புதிய தளபதி நியமனம் - யார் இந்த மனோஜ் பாண்டே

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 April 2022 2:07 PM GMT

இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டேவை மத்திய அரசு பணியமர்த்த உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் 29-வது ராணுவ தளபதியாக ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே உள்ளார். அவரது 28 மாத பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் முடிய உள்ளது எனவே இதனை தொடர்ந்து புதிய ராணுவ தளபதியாக யாரை மத்திய அரசு அமைத்து உள்ளது என்பதை எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த நிலையில், இந்தியாவின் புதிய ராணுவ தளபதியை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


அதன்படி, இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமித்து மத்திய அரசு உத்தரவு கொடுத்துள்ளது. இவர் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே ஓய்வு பெற்ற பிறகு, அதாவது ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் ராணுவத்தின் புதிய தளபதியாகப் பொறுப்பு ஏற்க உள்ளார். நாட்டின் 29 ஆவது ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பு ஏற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவரைப் பற்றிய சுவாரசிய தகவல் என்னவென்றால் ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியவர் ராணுவ தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.


இதுகுறித்து மத்திய அரசின் சார்பில் அதிகாரபூர்வமான தகவல்கள் வெளிவந்துள்ளது. நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியின் முன்னாள் மாணவரான பாண்டே 1982 ஆம் ஆண்டு டிசம்பரில் கார்ப்ஸ் ஆஃப் இன்ஜினியராக நியமிக்கப்பட்டார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பல்லன்வாலா செக்டரில் ஆப்ரேஷன் பராக்ரம் நடத்தப்பட்ட போது பொறியாளர் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கியவர் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே. தனது 39 ஆண்டுக்கால ராணுவ வாழ்க்கையில், பொறியாளர் படைப்பிரிவுக்கும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலுள்ள காலாட்படைப் படைப் பிரிவுக்கும், லடாக் செக்டாரில் ஒரு மலைப் பிரிவுக்கும், வடகிழக்கில் ஒரு படைப் பிரிவுக்கும் தலைமை தாங்கி உள்ளார்.

Input & Image courtesy: Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News