Kathir News
Begin typing your search above and press return to search.

NRIகளை வெளியேற்றும் வகையில் சட்டம் இயற்றிய ஓமான் அரசு!

NRIகளை வெளியேற்றும் வகையில் சட்டம் இயற்றிய ஓமான் அரசு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 March 2021 12:10 PM GMT

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பல பெயர் தங்களுடைய குடும்பங்களைப் விட்டுவெளிநாட்டில் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஒரு நோக்கத்திற்காக வெளிநாடு செல்கிறார்கள். ஆனால் அவர்கள் செல்லும் நாட்டில் அந்த நாட்டு அரசு என்ன செய்கின்றதோ? எந்த சட்டங்களை பின்பற்றுகிறது. அதற்கு ஏற்றபடிதான் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் பிறநாட்டு மக்கள் நடத்தப்படுவார்கள்.

அந்த வகையில், வளைகுடா நாடான ஓமானில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். இந்நிலையில், 2000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களை வெளியேற்றிவிட்டு ஓமானியர்களை பணியமர்த்தியுள்ளதாக ஓமான் அரசு தெரிவித்துள்ளது.


ஓமான் நாட்டில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்த 2,469 வெளிநாட்டு ஊழியர்களை வெளியேற்றிவிட்டு அந்த பணியிடங்களில் ஓமானியர்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியேற்றப்படும் 2,469 ஊழியர்களில் 1,455 ஆண்களும், 1,014 பெண்களும் அடங்குவர். இது முதற்கட்ட வெளியேற்றம் மட்டுமே. இதற்கு பின் அடுத்தடுத்த கட்டங்களாக கூடுதல் ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.


இஸ்லாமிய கல்வி, அரபு மொழி, பிரெஞ்சு மொழி, வாழ்க்கை திறன்கள், கணிதம், வேதியியல், உயிரியல், இயற்பியல், புவியியல், வரலாறு, தகவல் தொழில்நுட்பம், இசை என பல்வேறு துறை சார்ந்த ஆசிரியர்களை ஓமான் அரசு வெளியேற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து, ஓமானில் வேலைதேடும் குடிமக்கள் சுமார் 4000 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க கல்வித் துறை அமைச்சகம் உள்ளிட்ட ஆறு அரசு அமைப்புகளுடன் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாக ஓமான் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News