Kathir News
Begin typing your search above and press return to search.

NRI இந்தியருக்கு லாட்டரி மூலம் கிடைத்த சுமார் 7.3 கோடி தொகை!

NRI இந்தியருக்கு லாட்டரி மூலம் கிடைத்த சுமார் 7.3 கோடி தொகை!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 March 2021 4:56 PM IST

துபாயில் வசித்து வந்த இந்தியர் துபாய் லாட்டரியில் 1 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் சுமார் ரூ.7.3 கோடி) பரிசு வென்றுள்ளார். இந்தியாவை சேர்ந்த ராகுல் ஜுல்கா தற்போது நைஜீரியா நாட்டில் உள்ள போர்ட் ஹார்கோர்ட்டில் வசித்து வருகிறார். இவர் இதற்கு முன் இரண்டு ஆண்டுகளாக துபாயில் வசித்து வந்துள்ளார். துபாயில் நடைபெறும் லாட்டரி போட்டியில் ராகுல் ஜுல்கா ஒரு மில்லியன் டாலரை வெற்றிபெற்றுள்ளார்.


இந்த தொகையில் ஒரு பகுதியை சேமித்து வைக்கப்போவதாகவும், மீதத்தை வைத்து கடன்களை அடைக்கப்போவதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். வென்ற பணம் தனது இரு குழந்தைகளின் கல்வி கல்விக்காக செலவிடப் போவதாக அவர் கூறியுள்ளார் இவருடைய மகன் ஷார்துல், மற்றும் மகள் ஜூல்கா ஆகியோரை நோக்கி தான் வென்ற பணம் செல்லும் என்று அவர் கூறினார். ராகுல் தற்போது கிளாரிடன் ஹோட்டல்ஸ் நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.


ராகுல் ஜுல்கா மும்பையை சேர்ந்தவர். துபாய் லாட்டரியில் ஏற்கெனவே பல இந்தியர்கள் பரிசுகளை தட்டிச் சென்றுள்ளனர். இந்த வரிசையில் 177ஆவது இந்தியராக ஒரு மில்லியன் டாலரை தட்டிச் சென்றுள்ளார் ராகுல் ஜுல்கா. இதைப்பற்றி அவரிடம் கேட்கையில், "நான் எனக்கு லாட்டரி முதல் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும், இந்த பணத்தின் மூலம் என்னுடைய குடும்ப கஷ்டங்கள் தீர்ப்பேன்" என்று கூறினார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News