Kathir News
Begin typing your search above and press return to search.

NRI-களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் !

வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்.

NRI-களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 Aug 2021 1:59 PM GMT

தற்போது உள்ள இந்த நோய்த்தொற்று காலத்தில் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தங்களுடைய வேலைகளை வீட்டிலிருந்து பார்க்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்கு வேலை பார்ப்பவர்களும் இந்திய வருவதற்கான விமான வசதிகள் சரியாக இல்லை. ஆனால் தற்பொழுது இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மகிழ்ச்சியான செய்தியை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்தியாவில் இருந்து அமீரகம் வருகை தரும் குடியிருப்பு விசா பெற்ற விமான பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் கிடையாது என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் இருந்து துபாய்க்கு வருகை புரியும் விமான பயணிகளில் துபாய் விசா பெற்றுள்ளவர்கள் கட்டாயம் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர் விவகார பொது இயக்குனகரத்தின் நுழைவுக்கான அனுமதியை பெற்று இருக்க வேண்டும். துபாயை தவிர்த்து மற்ற பகுதிகளில் விசா பெற்று அமீரகத்துக்குள் வருகை புரியும் விமான பயணிகள் கட்டாயம் மத்திய அடையாளம் மற்றும் குடியுரிமை ஆணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும்.


இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் தாங்கள் வசிக்கும் பகுதியில் பயண நேரத்திற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை QR கோட் சான்றிதழுடன் எடுத்து வர வேண்டும். ராசல் கைமாவிற்கு வருகை புரிந்த 4-வது மற்றும் 8-வது நாளிலும், அபுதாபிக்கு வருகை புரிந்த 6-வது மற்றும் 11-வது நாளிலும் கட்டாயம் PCR பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் தற்போதைய விதிமுறைகளின்படி, கொரோனா தடுப்பூசி குறித்த ஆவணங்கள் எதுவும் கட்டாயம் என குறிப்பிடவில்லை. இந்திய விமான நிலையங்களில் புறப்பாடு பகுதியில் தடுப்பூசி நிலை குறித்து பரிசோதனை செய்யப்படுவது இல்லை.

Input: https://www.hindustantimes.com/india-news/indiauae-flights-why-passengers-have-to-reach-airport-5-6-hours-before-departure-101628679671334.html

Image courtesy:hindustan news


Next Story
கதிர் தொகுப்பு
Trending News