Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்லைன் ஆர்டர்: சைபர்கிரைம் கிரிமினல் இடம் 1.5 லட்சத்தை இழந்த NRI!

ஆன்லைனில் மது ஆர்டர் செய்து NRI ரூ.1.5 லட்சம் பணத்தை பறி கொடுத்து உள்ளார்.

ஆன்லைன் ஆர்டர்: சைபர்கிரைம் கிரிமினல் இடம் 1.5 லட்சத்தை இழந்த NRI!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 Feb 2022 2:18 PM GMT

மும்பையைச் சேர்ந்த 27 வயது வெளிநாட்டு வாழ் இளைஞர் ஒருவர், அமெரிக்காவில் உள்ள வங்கி ஒன்றில் பணி புரிகிறார். தற்போது விடுமுறையில் மும்பையில் உள்ள அவர், தனது சர்வதேச டெபிட் கார்டு விவரங்களை சைபர் கிரிமினல் ஒருவரிடம் பகிர்ந்து கொண்டதால் ரூ.1.54 லட்சம் மோசடி செய்யப்பட்டார். ஆனால், NRI அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுமார் ஒரு மணி நேரத்திற்குள் யார்? அந்த சைபர் கிரைம் கிரிமினல் என்று கண்டுபிடித்துள்ளார்கள். புகார்தாரர் மலபார் ஹில்லில் உள்ள தனது உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்தார்.


உதவி காவல் ஆய்வாளர் திகாரம் திகேமலபார் ஹில் காவல் நிலைய அதிகாரி கூறுகையில், "புகார் அளித்த NRI தனது நண்பர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழுவில் இருந்தவர். அவர் ஒரு ஒயின் ஷாப்பின் எண்ணை எந்த இடத்தில் ஆர்டர் செய்யலாம்? என்று குழுவில் கேட்டார். அவரது நண்பர் ஒருவர் ஆன்லைனில் ஒயின் ஷாப்பின் எண்ணைத் தேடி அவருக்கு அனுப்பினார். புகார்தாரர் அந்த அழைத்தபோது எண்ணுக்கு அழைத்தபோது, ​​அழைப்பைப் பெற்ற நபர் மதுவை டெலிவரி செய்யலாம் எனக் கூறி, புகார்தாரரிடம் ஆன்லைனில் பணம் அனுப்பச் சொன்னார்.


புகார்தாரர் தனது கிரெடிட் கார்டில் இருந்து ரூ.5,500 செலுத்தினார். பின்னர், அவர் மற்றொரு ஆர்டரை வைக்க நினைத்து மீண்டும் அழைத்தார். அழைப்பு பெறுபவர் தனது கிரெடிட் கார்டின் விவரங்களைக் கேட்டார் மற்றும் உடனடியாக டெலிவரி செய்வதை உறுதி செய்தார் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினார். அவரது கிரெடிட் கார்டில் இருந்து 1.48 லட்சத்திற்கும் அதிகமான பணம் பிடித்தம் செய்யப்பட்டதாக புகார்தாரருக்கு உடனடியாக செய்தி வந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும், அந்த நபர் காவல்துறையை அணுகினார். எனது டெலிவரி செய்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Input & Image courtesy: Times of India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News