Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளா கோயிலில் நடைபெற்ற மஹிந்திரா தார் ஏலத்தில் NRI வெற்றி.!

கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு சொந்தமான மஹிந்திரா தார் ஏலத்தில் NRI வெற்றி.

கேரளா கோயிலில் நடைபெற்ற மஹிந்திரா தார் ஏலத்தில் NRI வெற்றி.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 Dec 2021 2:24 PM GMT

பெரும்பாலும் வெளிநாட்டில் வேலை செய்யும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தன்னுடைய சொந்த ஊரில் ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். அதிலும் குறிப்பாக தன்னுடைய சொத்துக்களை பயன்படுத்தி கோவிலுக்கு பணிகளை செய்ய வேண்டும் என்றும் நினைப்பார்கள். அதைப்போல தற்போது பஹ்ரைனைச் சேர்ந்த மலையாளி அமல் முகமது அலி என்பவர் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணா கோயிலின் மஹிந்திரா தார் ஒன்றை சனிக்கிழமை ஏலத்தில் வென்றார்.


சமீபத்தில் மஹிந்திரா குழுமத்தால் கோவிலுக்கு வழங்கப்பட்ட ரெட் லிமிடெட் எடிஷன் எஸ்யூவியை அவர் ₹15.10 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். அடிப்படை விலை ₹15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், ஏலம் முடிந்த உடனேயே, தேவஸ்வம் சிலர் வாகனத்தை ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக அவர் வேறு ஒரு மதத்தை சார்ந்தவர் என்பதால் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதும் தேவஸ்தான நிர்வாகிகள் கூடி முடிவு எடுத்துள்ளார். இதற்கு தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.


போராட்டத்தை தொடர்ந்து, குருவாயூர் தேவஸ்வம் தலைவர் கே.பி.மோகன்தாஸ், நிர்வாகக் குழு டிசம்பர் 21-ம் தேதி மீண்டும் கூடி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். இத்தகைய முடிவுகளுக்கு முன்னர் அந்த NRI தனக்கு இந்த ஏலம் தனக்கு வேண்டாம் என்றும் கூறியுள்ளார். வெளிநாடு வாழ் இந்தியருக்கான ஏலத்தில் பங்கேற்ற சுபாஷ் பணிக்கர், நடைமுறை முடிந்தவுடன் ஏலத்தை ரத்து செய்வது சரியல்ல என்று அவர் கருத்தை கூறியுள்ளார்.

Input & Image courtesy: Thehindu



Next Story
கதிர் தொகுப்பு
Trending News