NRI வைப்பு தொகையை பயன்படுத்த திட்டம்: RBI இடம் கோரிக்கையை வைக்கும் கேரளா !
கேரள வங்கிகள் தற்போது வெளிநாடு வாழ் இந்தியர்களின்(NRI) வங்கி டெபாசிட் தொகையை பயன்படுத்த திட்டமிடுகிறது.
By : Bharathi Latha
வெளிநாடுகளில் இருந்து தங்களுடைய வங்கி கணக்கிற்கு அதிக அளவில் பணம் செலுத்தும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பணத்தை நல்ல முறையில் ஒரு திட்டத்தை கேரள வங்கிகள் முதன்முதலில் செயல்பட உள்ளன. மேலும் இதுகுறித்து வங்கியின் IT ஒருங்கிணைப்பு திட்டத்தை அமைச்சர் V.N.வாசவன் தொடங்கி வைத்தார் அப்பொழுது இது பற்றிப் பேச்சுவார்த்தை நடந்தது. கேரளா வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியிடம் (RBI) NRIகளிடமிருந்து டெபாசிட் பெறுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள வங்கி வைப்புக்கள் பங்குச் சந்தைகள், பத்திரங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கான கடன்களாக முதலீடு செய்யப்பட்டன என்று கூட்டுறவு மற்றும் பதிவுத்துறை அமைச்சர் V.N.வாசவன் சனிக்கிழமை தெரிவித்தார்.
கேரளா வங்கி, கேரளாவில் உள்ள NRIகள் கேரளாவிற்கு அனுப்பும் பணத்தைப் பயன்படுத்தி மாநிலத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. திரு. வாசவன் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு, விரைவான செயலாக்கம் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். IT ஒருங்கிணைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு அவர் மேலும் கூறுகையில், "இது கேரளா வங்கியை புதிய தலைமுறையாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண பரிமாற்றம் மற்றும் மொபைல் வங்கி உட்பட அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் வழங்கும் முழு தகவல் தொழில்நுட்பம் கொண்ட வங்கி. விப்ரோ நிறுவனத்திற்கு IT ஒருங்கிணைப்பு பணி ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இன்போசிஸ் சேவை தளங்களை வழங்கும்.
கேரளா வங்கியின் வளர்ச்சி, 13 முன்னாள் மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் உச்ச கூட்டுறவு வங்கியை ஒருங்கிணைத்து, அனைத்து நிறுவனங்களையும் ஒரே டிஜிட்டல் தளத்திற்கு கொண்டு வரும்" என்று அவர் மேலும் கூறினார். கேரளாவின் முதல் வங்கியாக மாறுவதே குறிக்கோள், டிஜிட்டல் சேவைகள் மூன்று மாதங்களில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கடைசியில் கூறினார்.
Input & Image courtesy:Thehindu