ரோம் நகரசபை நிர்வாகக் குழுவிற்கு தேர்வான முதல் இந்திய பெண் !
ரோமின் நிர்வாகக் குழுவிற்கு முதன்முதலாக இந்தியாவில் இருந்த கேரளாவைச் சேர்ந்த பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
By : Bharathi Latha
இந்தியாவைச் சேர்ந்த பல பெண்மணிகள் வெளிநாடுகளில் பல்வேறு உயர்ந்த பதவிகளில் தலைமை வகித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ரோமின் நிர்வாகக் குழுவிற்கு கேரளப் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார். குறிப்பாக கேரளாவில் கொச்சியில் உள்ள தோப்பும்பாடி பகுதியைச் சேர்ந்த தெரசா புத்தூர் இன்று பெண்மணிகள் தற்போது இந்த அரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில், ரோம் நகரின் நிர்வாகக் குழு உறுப்பினராக கேரளாவைச் சேர்ந்த தெரசா புத்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரோம் நகரசபைக்கு இந்திய பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக இருந்த தெரசா, இத்தாலிய குடிமக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினர் சி.பி மணி குமாரமங்கலம் தெரிவித்தார். தெரசா 35 ஆண்டுகளுக்கு முன்பு செவிலியராக ரோம் சென்றடைந்தார். அவர் கடந்த 15 ஆண்டுகளாக ஜனநாயகக் கட்சி உறுப்பினராக இருந்தார். மேலும் அவருடைய சமூக நலனில் அக்கறை காட்டும் அவருடைய குணம் தான் இந்த பதவிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
சுகாதாரத் துறையிலும் சமூக நலத்துறையிலும் தெரசாவின் செல்வாக்கு அவர் தேர்தலில் வெற்றி பெற உதவியது. மேலும் இவருடைய கணவர் கொச்சியைச் சேர்ந்த வக்கச்சன் ஜார்ஜ் மற்றும் குழந்தைகள் வெரோனிகா மற்றும் டேனியல் விடுமுறையின் போது கட்டாயம் குடும்பத்துடன் கொச்சிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
Input & Image courtesy:Mathrubhumi