விலைவாசி உயர்வு காரணமாக சிங்கப்பூர் மக்கள் பாதிப்பு - என்ன நடக்கிறது?
விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக சிங்கப்பூர் பொருளாதாரம் பாதிப்பதாக மக்கள் கருத்து.
By : Bharathi Latha
தற்போது உலக அளவில் பணவீக்கம் காரணமாக பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் அதிலும் குறிப்பாக நம்முடைய அண்டை நாடான இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைப்போல சிங்கப்பூர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சிங்கப்பூரில் தற்போது பணவீக்கம் அதிகளவில் நிகழ்ந்து வருவதாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மேலும் கூறப்படுகிறது.
மேலும் இந்த நடவடிக்கைகள் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுவதாக தெரியவருகிறது. இதுபற்றி சிங்கப்பூரைச் சேர்ந்த பிளாக் பாக்ஸ் என்று நிறுவனம் சார்பில் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது இந்த கணக்கெடுப்பில் சிங்கப்பூரை சேர்ந்த 758 பேர் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துள்ளார்கள். மேலும் இந்த கணக்கெடுப்பு முற்றிலும் அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கை குறித்து தங்களுடைய பொருளாதாரம் மற்றும் வாங்கும் சக்தி குறைந்துள்ளதாக சுமார் 55 சதவீதம் பேர் பதிவு செய்துள்ளார்கள். மேலும் 32 சதவீதம் பேர் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து தங்களுடைய ஆதரவுகளையும் தெரிவித்துள்ளார்கள். மேலும் இத்தகைய சூழ்நிலை காரணமாக பல்வேறு மக்கள் தங்களுடைய அன்றாட செலவுகளை மிகவும் குறைந்துள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
Input & Image courtesy: Polimer News