இந்தியாவை தொடர்ந்து சர்வதேச பயணிகளை அனுமதிக்க உள்ள சிங்கப்பூர் !
வருகிற நவம்பர் 29 முதல் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லாத பயணத்தை சிங்கப்பூர் அனுமதிக்கிறது.
By : Bharathi Latha
திங்களன்று COVID-19 பற்றி பல அமைச்சக பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பர அங்கீகாரம் செய்வது குறித்து சிங்கப்பூரும், இந்தியாவும் விவாதித்து வருவதாகக் கூறினார். ஏற்கனவே சர்வதேச பயணிகளை நவம்பர் 12 முதல் இந்தியா அங்கீகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நவம்பர் 29 முதல் இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லாத பயணத்தை அனுமதிக்க சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது. மேலும் அடுத்த மாத தொடக்கத்தில் மேலும் மூன்று நாடுகளைச் சேர்க்கும்.
தற்போது, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி உட்பட 13 நாடுகள் சிங்கப்பூரின் தடுப்பூசி பயண பாதை திட்டத்தின் கீழ் உள்ளன என்று சேனல் நியூஸ் ஏசியா தெரிவித்துள்ளது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிக்கையின்படி, நவம்பர் 29 முதல் இந்தியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்படாத பயணத் திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும். மேலும், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.
இதன்மூலம் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்குள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் இனி வருகைக்குப் பிந்தைய சோதனைகள் வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை. அவர்கள் வந்தவுடன் 14 நாட்களுக்கு சுயமாக கண்காணிக்க வேண்டும்" என்று ஈஸ்வரன் கூறினார். "இந்தியாவுடனான எங்கள் கலந்துரையாடல்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் சென்னை, டெல்லி மற்றும் மும்பைக்கு தலா இரண்டு தினசரி VTL விமானங்களை நவம்பர் 29 ஆம் தேதிக்குள் மீண்டும் தொடங்க இலக்கு வைத்துள்ளோம். சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) இறுதி செய்யப்பட்டவுடன் கூடுதல் விவரங்களை வழங்கும்" என்று CNA அறிக்கை மேற்கோளிட்டுள்ளது என்று ஈஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Input & Image courtesy:economictimes