சிங்கப்பூரில் நடைபெற்ற இளையர் விழா: கலந்துகொண்ட சிறப்புப் பேச்சாளர் !
சிங்கப்பூரில் இணையதளம் மூலமாக இளையரை ஊக்குவிக்கும் விதமாக இளையர் விழா சிறப்பாக நடைபெற்றது.
By : Bharathi Latha
இன்றைய சூழலில் இளைய தலைமுறையினர் மிகவும் சிறப்பான செயல்களை செய்து வருகிறார்கள். மேலும் அத்தகைய சிறப்பாக செயல்படுகிறது தலைமுறையினருக்கு ஒரு விழாவை சிங்கப்பூரில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கம் வழிநடத்தியது. இளையர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை அதிகாரவப்பூர்வமாக அமைப்பினுள் கொண்டுவந்ததை கொண்டாடும் வகையில் ஒரு விழாவை ஏற்பாடு செய்தது.
இதன் விளைவாக, இளையர்களை உற்சாகப்படுத்தி திறம்படசெயல்பட அழைப்பு விடுக்கும் விதமாகவும் "இளையர் விழா-2021" என்ற நிகழ்வை ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி, சிங்கப்பூரில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் இணையம் வழியாக சிறப்பாக நடத்தியது. இளையர்களை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி சங்கத்தின் வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதே தன்னுடைய கனவாகக் கொண்ட பாரதியின் "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற வரிகளை மேற்கோள் காட்டி விழாவை வழிநடத்தி சென்றது.
இம்மாபெரும் இவ்விழாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக, சிறப்புப் பேச்சாளர் கலைமாமணி பேராசிரியர் முனைவர். ஞானசம்பந்தன் அவர்கள் "வேரும் விழுதும்" என்ற தலைப்பில் அற்புதமாக உரையாற்றினார். அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் சிறப்புகளை எடுத்துரைத்த அவர் பின்னர் இளமைக் கால கல்லூரி நினைவுகளை தனது நகைச்சுவையான பேச்சால் மீட்டெடுத்து நிகழ்ச்சியை நகைச்சுவையாக கொண்டு சென்றார். நட்பின் பெருமையையும், சிறப்பினையும் திருக்குறள் மற்றும் கண்ணதாசன் வரிகளோடு நினைவு கூர்ந்தார். இன்றைய நடைமுறைப்படி, முன்னாள் மாணவர்கள் எடுக்கும் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளை பற்றி குறிப்பிட்ட இவர், ஆலமர வேர்களாகிய முன்னாள் மாணவர்களும், விழுதுகளாகிய இளையர்களும் கைகோர்க்க வேண்டியதன் அவசியத்தை சிறப்பாக எடுத்துக் கூறி விடைபெற்றார்.
Input: https://www.virakesari.lk/article/111115
Image courtesy: virakesari