Kathir News
Begin typing your search above and press return to search.

கட்டுப்பாடுகளை தளர்த்தும் சிங்கப்பூர்: இந்தியர்களின் வருகைக்கு அனுமதி !

சிங்கப்பூர் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி, இந்தியர்கள் சில நிபந்தனைகளின் கீழ் வரலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை தளர்த்தும் சிங்கப்பூர்: இந்தியர்களின் வருகைக்கு அனுமதி !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 Oct 2021 7:16 PM IST

இரண்டாம் அலை கொரோனா பரவலை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிநாட்டு விமான சேவைகளை சிங்கப்பூர் அரசு ரத்து செய்தது. அதன் பிறகு நோய் தொற்று குறைந்ததை அடுத்து ஒரு சில நாடுகளுக்கு விமானம் இயக்கப்பட்டது. ஆனாலும் அத்தியாவசியப் பணிகளுக்கு வருபவர்கள் மட்டுமே சிங்கப்பூருக்கு அனுமதிக்கப்பட்டார்கள். குறிப்பாக சிங்கப்பூரில் வீட்டு வேலைகள் உள்ளிட்ட சாதாரண பணிகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் செய்து வந்தனர். அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. மேலும் மற்ற பணிகளுக்கு செல்பவர்களை அனுமதிக்கவில்லை.


இப்போது சிங்கப்பூர் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 13 நாட்டை சேர்ந்தவர்கள் 2 தடுப்பூசி செலுத்தி இருந்தால் அங்கு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. சிங்கப்பூர் வருகிற இந்தியர்கள் கட்டாயமாக 2 தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசு விதித்துள்ளது. ஆனாலும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேபோல பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை, மியான்மர் ஆகிய 5 நாடுகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


இந்த ஐந்து நாடுகளை சேர்ந்தவர்கள் சிங்கப்பூருக்கு வழக்கம் போல செல்லலாம். ஆனால் அவர்கள் சிங்கப்பூர் வருவதற்கு முன்பாக 14 நாட்கள் பயணம் செய்த தகவல்களை தர வேண்டும். 2 தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல தாய்லாந்து நாடும் இந்தியர்களுக்கு தடை விதித்து இருந்ததை விலக்கிக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy:Economic times


Next Story
கதிர் தொகுப்பு
Trending News