ராகுல் காந்தி குமரிக்கு வருகை - சுற்றுலா பயணிகளுக்கு தடை!
ராகுல் காந்தி கன்னியாகுமரிக்கு வருகை தருவதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
By : Bharathi Latha
கன்னியாகுமரியில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 3500 கிலோமீட்டர் 150 நாட்கள் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதன் காரணமாக இன்று கன்னியாகுமரியில் இந்த பயணத்தை மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்க இருக்கிறார்.
இதன் காரணமாக அந்த பகுதியில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட காரணமாக அங்குள்ள வியாபாரிகள் இன்று தங்களுடைய வியாபாரத்தை இழந்ததாகவும் கருது தெரிவித்துள்ளார்கள். மேலும் சுற்றுலாப் பயணிகள் பெரும் எதிர்பார்ப்புடன் வந்த நிலையில் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் சுற்றுலா பயணிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை நடைபெற உள்ள இந்த தொடக்க விழா பயணத்தில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கடற்கரை சாலை, காந்தி மண்டபம், திருவேணி சங்கமம் உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி முழுவதும் தற்போது காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Input & Image courtesy: https://www.dinamani.com/tamilnadu/2022/sep/07/tourists-banned-in-kumari-today-3911979.html