Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய மாணவர்களின் விசாவை நிறுத்தி வைத்த அமெரிக்க தூதரகம்!

இந்திய மாணவர்களின் விசாவை அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்திய மாணவர்களின் விசாவை நிறுத்தி வைத்த அமெரிக்க தூதரகம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 Jan 2022 1:12 PM GMT

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்திய மாணவர்களுக்கு வழங்கும் விசாவை தற்காலிகமான நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்காவில் படிப்பிற்காக செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் ஒரு சூழலுக்கு விசாக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ஏற்கனவே அக்டோபர் 1 முதல் ஜனவரி 15 வரை குளிர் காலத்திற்கான மாணவர்கள் சேர்க்கை முடிந்துவிட்ட, ஒரு சூழ்நிலையில் இந்திய மாணவர்களை ஏற்கனவே அமெரிக்க தூதரகம் நேர்காணல் செய்து தேர்ந்தெடுத்துள்ளது.


மேலும் அதிகரித்த விண்ணப்பங்கள் காரணமாக மேலும் இந்த மாதத்திற்கான விசா நேர்காணல் நிறுத்தி வைப்பதாகவும் அமெரிக்க தூதரகம் தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பான ட்விட்டர் பதிவு ஒன்றையும் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் ஒரு சூழ்நிலையில் அமெரிக்க தூதரகம் குறிப்பாக இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை குறிப்பாக கவனித்து வருகிறது. படிப்பிற்காக இந்தியாவில் இருந்த அமெரிக்கா செல்லும் மாணவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.


இருந்தாலும் இந்த நோய் தொற்று காலத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க இந்திய மாணவர்களின் சதவீதம் 15 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் USA சார்பில் கூறப்படுகிறது. மேலும் இதுவரை இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று படித்தவர்கள் எண்ணிக்கை, குறிப்பாக கடந்த காலத்தில் 150000 ஆன மாணவர் விசாவில் அமெரிக்கா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Economic times



Next Story
கதிர் தொகுப்பு
Trending News