Begin typing your search above and press return to search.
தீபாவளியை சிறப்பாக விருந்து வைத்து கொண்டாடிய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் - பண்டிகை களைகட்டிய வாஷிங்டன்
தீபாவளியை முன்னிட்டு அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் களை கட்டியது.

By :
தீபாவளியை முன்னிட்டு அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் களை கட்டியது.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்திய-அமெரிக்கர்களுக்கு தீபாவளி விருந்தளித்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது அதிகார இல்லத்தில் இந்திய-அமெரிக்கர்களுக்கு விருந்தளித்து உபசரித்துள்ளார்.
வாஷிங்டனில் உள்ள கடற்படை கண்காணிப்பு இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற விருந்தில் அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகரம் இந்திய வம்சா வழியிருமான நீரா டான்டைன் மற்றும் இந்தியாவிற்கான அமெரிக்க முன்னாள் தூதர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்துக்கள், ஜெயின்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் உள்ளிட்ட அனைத்து இந்திய அமெரிக்கர்களும் கமலா ஹாரிஸ் அளித்த தீபாவளி விருந்தில் கலந்து கொண்டனர்.
Next Story