Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையைச் சேர்ந்த NRI கணவர் மீது மனைவி புகார்: போலீசார் நடவடிக்கை!

சென்னை சேர்ந்த NRI கணவர் மீது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த NRI கணவர் மீது மனைவி புகார்: போலீசார் நடவடிக்கை!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Dec 2021 1:45 PM GMT

வியாழக்கிழமை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் NRI கணவரின் மனைவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப் பட்டுள்ளார். அரும்பாக்கத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான இவர், மேலும் பக்ரைனில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞரான இவர் மீது சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த 25 வயது பெண், ஒரு வருட காதலுக்குப் பிறகு பிப்ரவரி 2021 இல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகுதான் தன்னுடைய கணவரின் இத்தகைய நடவடிக்கைகள் தனக்கு தெரிய வந்துள்ளதாகவும் அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.


திருமணத்திற்குப் பிறகு தனது கணவரின் லேப்டாப்பை சாதாரண வகையில் ஓபன் செய்த பிறகுதான், அவரைப் பற்றிய உண்மையான முகம் எனக்குத் தெரிய வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் அதில் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்கள் இடம் பெற்று இருப்பது அவருக்கு தெரிய வந்துள்ளது. இது அடுத்து தனது கணவரின் நடவடிக்கைகள் அவர் கண்காணிக்க ஆரம்பித்துள்ளார். இதை செயல்களுக்காக அவர் சமூக வலை தளங்களை தவறான முறையில் பயன்படுத்தும் தெரியவந்துள்ளது.


எனவே சமூக வலைதளங்களில் தனக்கென்று வேறொரு பெண் பெயரில் தன்னுடைய கணவர் இடம் அறிமுகமாகி, பிறகு அவரை பொலிசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். சமூக வலைத்தளங்களில் மிகவும் நெருக்கமாக பழகி பிறகு இருவரும் சந்திப்பதற்காக ஒரு பொதுவான இடத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்காக திருவான்மியூரில் உள்ள ஒரு ஹோட்டலை தேர்ந்தெடுத்துள்ளனர். அங்கு வந்து தன்னுடைய கணவரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

Input & Image courtesy: Daiji world





Next Story
கதிர் தொகுப்பு
Trending News