அ.தி.மு.க. சார்பில் விருப்பமனு கொடுக்கலாம்: ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அதிரடி அறிவிப்பு.!
அ.தி.மு.க. சார்பில் விருப்பமனு கொடுக்கலாம்: ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அதிரடி அறிவிப்பு.!
By : Kathir Webdesk
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், வேட்பாளர் தேர்வுக்கான கட்டணம் மற்றும் விண்ணப்பம் வெளியிடப்படுகிறது என்று அதிமுக தலைமமை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்கள் 2021, விருப்பமனு பெறுதல், 24.02.2021 முதல் 5.3.2021 வரை.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 24.2.2021 புதன்கிழமை முதல் 5.3.2021 வெள்ளிக்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு விண்ணப்பக் கட்டணத் தொகையை செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கட்டண விவரம்: தமிழ்நாடு ரூ.15,000 புதுச்சேரி ரூ.5,000, கேரளா ரூ.2000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.