Kathir News
Begin typing your search above and press return to search.

சொந்த கார் கூட இல்லாத சாமானியனான ஸ்டாலின், இரண்டு தனி விமானத்தில் குடும்பத்தோடு கொடைக்கானல் பறந்தார்!

சொந்த கார் கூட இல்லாத சாமானியனான ஸ்டாலின், இரண்டு தனி விமானத்தில் குடும்பத்தோடு கொடைக்கானல் பறந்தார்!

MuruganandhamBy : Muruganandham

  |  17 April 2021 1:00 AM GMT

மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவில், அசையும் சொத்தாக வாகனம் எதுவும் தன் பெயரில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மு.க.ஸ்டாலினிடம் சொந்தமாக ஒரு கார்கூட இல்லையா? வாடகைக் காரிலா ஓட்டு கேட்டு வருகிறார்? என்றெல்லாம் கிண்டலடித்து பரபரத்தன மீம்ஸ்கள்.

இந்த நிலையில் தேர்தல் முடிந்த கையோடு, ஸ்டாலின் இரண்டு குட்டி விமானத்தில் குடும்பத்தினருடன் கொடைக்கானல் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர்களுடன் தயாநிதி மாறன் கலாநிதி மாறன் குடும்பத்தினரும் கொடைக்கானல் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையிலிருந்து இரண்டு குட்டி விமானத்தில் பயணம் செய்த அவர்கள், மதுரையில் இருந்து கார் மார்க்கமாக கொடைக்கானல் சென்றனர். அங்கு வரும் 19-ஆம் தேதி வரை தங்கி சுற்றிப் பார்ப்பதாக தெரிய வந்துள்ளது.

கார் கூட வாங்க முடியாத அளவுக்கு பண கஷ்டத்தில் சிக்கி தவித்த ஸ்டாலின், தேர்தல் முடிந்த கையோடு, தமிழகத்திற்குள்ளேயே தனி விமானம் வைத்து பறப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News