Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் விவேக் அவர்களின் மரணத்திலும் இழிவான அரசியல் செய்யும் திருமாவளவன் - ஒருவர் மரணத்திலும் கூட அரசியலா?

நடிகர் விவேக் அவர்களின் மரணத்திலும் இழிவான அரசியல் செய்யும் திருமாவளவன் - ஒருவர் மரணத்திலும் கூட அரசியலா?

Mohan RajBy : Mohan Raj

  |  17 April 2021 4:00 AM GMT

ஒருவர் இறந்தால் அவரின் வாழ்விற்காகவோ, அவர் செய்த பணிகளுக்காகவோ, அவர் செய்த தான, தர்ம, நல்ல காரியங்களுக்காகவோ, அவரின் குடும்பத்திறகாகவோ என ஏதாவது ஒரு வகையில் நல்ல மனது படைத்த மனிதரின் மனம் சற்று இரக்கப்படும், வாழ்வை புரிந்த ஞானிகள் அவரின் ஆன்மா முக்தியடைய வேண்டுவார்கள், அவரால் பயனடைந்தவர்கள் இறந்தவர் பிரிவு தாங்காமல் கதறுவார்கள்.

பலர் குறைந்தபட்சமாவது ஒரு துளி கண்ணீராவது சிந்துவார்கள். ஆனால் யார் எப்பொழுது இறப்பார்கள் அவரின் மறைவில் எவ்வாறு காரணத்தை புகுத்தி அதில் தனது அரசியல் விளையாட்டை நிகழ்த்தலாம் என சில கொடூர மனம் படைத்தவர்கள் காத்திருப்பார்கள்.

அந்த வகையில் இன்று அதிகாலை மாரடைப்பின் காரணமாக நடிகர் விவேக் மரணமடைந்தார். நேற்றே அவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதனைதொடர்ந்து தீவிர சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிர் பிரிந்தது.

இதனை தொடர்ந்து பல்வேறு திரைத்துரையினரும், அரசியல் பிரமுகர்களும், சினிமா ரசிகர்களும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில், "#நடிகர்_விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது.

தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே #அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு எமது அஞ்சலி" என நடிகர் விவேக் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கிறேன் என்கிற பெயரில் தனது அரசியல் எண்ணத்தை புகுத்தியுள்ளார்.

அதாவது மாரடைப்பால் இறந்த நடிகர் விவேக்கின் மரணம் கொரோனோ தடுப்பூசி போட்டுக்கொண்டதால் நிகழ்ந்திருக்குமோ என சந்தேகத்தை கிளப்பி விட்டு அதில் அரசியல் செய்ய பார்க்கிறார். என்னதான் ஆளும் மத்திய அரசின் மீது வன்மம் இருந்தால் இப்படி ஒருவர் இறப்பிலும் அதனை வைத்து அரசியல் செய்ய முடியும்?

இவ்வளவிற்கும் திருமாவளவன் அவர்களே கொரோனோ முதற்கட்ட தடுப்பூசி சென்ற மாதமே போட்டுக்கொண்டார். அது மட்டுமின்றி நேற்று இரண்டாவது தடுப்பூசியும் எடுத்துகொண்டார் என்பது கூடுதல் தகவல் அப்படி தடுப்பூசி போட்டுக்கொண்டு தனக்கு ஏதும் ஆகவில்லை என உணர்ந்துமே மற்றொருவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வேறு காரணமாக அதாவது மாரடைப்பால் இறந்த நிகழ்வை அரசியலாக்குவது மனதில் உள்ள இழிவான காழ்ப்புணர்ச்சி அன்றி வேறு என்ன இருக்க முடியும்?

Next Story
கதிர் தொகுப்பு
Trending News