Kathir News
Begin typing your search above and press return to search.

தேங்காய் நார் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை வெறி கொண்டு சுற்றி வளைத்த தி.மு.க'வினர் - போலீஸ் தலையீட்டுக்கு பின்னர் அசடு வழிய சென்றனர்

தேங்காய் நார் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை வெறி கொண்டு சுற்றி வளைத்த தி.மு.கவினர் - போலீஸ் தலையீட்டுக்கு பின்னர் அசடு வழிய சென்றனர்

Mohan RajBy : Mohan Raj

  |  21 April 2021 3:30 AM GMT

தேங்காய் நார் லோடு ஏற்றி சென்ற லாரியை பார்த்து திகிலடைந்த உடன்பிறப்புகள், லாரி ஓட்டுநர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதால் சிறிது நேரம் வீட்டிற்கு சென்று வருவதற்குள் அல்லோலகல்லோலப்பட்டு கடைசியில் தேங்காய் நார் என்றவுடன் அசடு வழிய சென்றனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திட்டக்குடி மற்றும் விருத்தாச்சலம் தொகுதிக்கான வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று மாலை கல்லூரிக்குச் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் பள்ளியின் முன்பு வெகு நேரமாக கண்டெய்னர் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, அங்கிருந்த தி.மு.கவினர் "அய்யோ நம்ம ஏரியாவுக்கு கண்டெய்னர் வந்துட்டுடா பொட்டிக்கு ஆபத்துடா" என்கிற ரீதியில் தி.மு.க மற்றும் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் அங்கு குவிந்தனர். பின்னர் தங்கள் பீதியடைந்தது பத்தாது என காவல்துறையினரையும் அந்த இடத்திற்கு இழுத்து வந்தனர். இதனை தொடர்ந்து தி.மு.கவினரின் பயத்தை கண்டு காவல்துறையினர் விசாரிக்க துவங்கினர்.

விசாரித்து பார்த்ததில், திருப்பூரிலிருந்து சென்னைக்கு தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி என்றும், லாரி ஓட்டுநர் விருத்தாச்சலத்தைச் சேர்ந்தவர் என்பதால், வீட்டிற்கு செல்வதற்காக லாரியை நிறுத்தியதாக தெரிவித்தனர். பின்னர் காவல்துறை அறிவுறுத்தலின் பேரில், கண்டெய்னர் லாரியை ஓட்டுநர் அங்கிருந்து எடுத்துச் சென்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

"அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய்" என்பதுபோல் "தி.மு.ககாரர்கள் கண்ணிற்கு கண்டெய்னர் எல்லாம் பூதமாக தெரிவது" வித்தியாசமாக உள்ளது. தொண்டர்கள் இப்படி கண்ணில் படும் கண்டெய்னர்கள் பின்னால் வெறி பிடித்து ஓடிக்கொண்டிருக்க தி.மு.க தலைவரோ கொடைக்கானலில் இன்ப சுற்றுலாவில் பொழுதை கழிக்கிறார். தி.மு.க வரலாறு அப்படி!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News