வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட்ட வீடியோ விவகாரம் தி.மு.க வேட்பாளர் கே.என்.நேருவுக்கு முன்ஜாமீன்!

வாக்காளர்களுக்கு பணம் தருவதில் பேரம் பேசிய விவகார வீடியோ வெளியான விவகாரத்தில் கே.என்.நேரு'வுக்கு முன்ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது பற்றி தி.மு.க.வின் முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளருமான கே.என்.நேரு "ஓட்டுக்கு 200 ரூபாய் குடுங்கள்" என்கிற ரீதியில் பேசிய வீடியோ சமூக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி சர்ச்சையானது.
இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட முசிறி காவல்துறையினர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்ந நிலையில் இந்தப் புகார் அரசியல் உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்டிருப்பதால் வழக்கை ரத்து செய்யக்கோரி கே.என்.நேரு முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் கடந்த 16 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் கே.என்.நேருவுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது.