தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் கண்டெயினரை கூட வெருகி வெருகி பார்க்கும் தி.மு.க-வினர் - புதுசு புதுசா கிளப்பும் புரளி!

தமிழக வாக்குசாவடிகளில் மத்தியப் பாதுகாப்பு படை வீரர்களும், தமிழ்நாடு காவல்துறையினரும் இணைந்து, உரிய பாதுகாப்பை வழங்கிவருகின்ற வேளையில், கரூரில் திமுகவினர் தினம் தினம் புது புது புரளிகளை கிளப்பி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில், கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் முடிந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையத்தைச் சுற்றிப் பல்வேறு சர்ச்சை விஷயங்களை தி.மு.க-வினர் கிளப்பிவருகிறார்கள்.
இது குறித்து கருத்து தெரிவித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூரிலுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அனைத்தும் அரசியல் கட்சியின் முகவர்கள் கண்காணிப்பில் உள்ளன.
ஆனால், தி.மு.க-வினர் வாக்குச்சாவடி மையங்களில் முன்பு கன்டெய்னர் லாரிகள் வருவது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து, தேவையில்லாத பதற்றத்தை உருவாக்குகின்றனர். இங்கே கணினி இயங்கியது குறித்தும் புரளியைக் கிளப்புகின்றனர்.
தி.மு.க-வினர் தோல்வி பயத்தால், என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிவருகின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் கன்டெய்னர் லாரிகள் செல்வதற்கும், வாக்குப்பெட்டி இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.