Kathir News
Begin typing your search above and press return to search.

"கலைஞர் மட்டும் இல்லைன்னா ஆக்ஸிஜன் இருக்குமா?" என பொய்களை அள்ளி வீசிய உபிஸ் - ஓவரா புளுகாதீங்க என விளக்கமளித்த மருத்துகல்லூரி டீன்!

கலைஞர் மட்டும் இல்லைன்னா ஆக்ஸிஜன் இருக்குமா? என பொய்களை அள்ளி வீசிய உபிஸ் - ஓவரா புளுகாதீங்க என விளக்கமளித்த மருத்துகல்லூரி டீன்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  24 April 2021 12:00 PM IST

ஒரு கட்சியின் ஆட்சிகாலத்தில் அதன் தலைவர்கள் செய்த சாதனையை மக்களுக்கு ஞாபகப்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது கட்சி தொண்டர்கள் இயல்பு, ஆனால் கடந்த காலங்களில் நடந்த அனைத்தையும் தங்கள் தலைவன்'தான் நடத்தி காட்டினார் என பொய்யுரைப்பது மட்டுமல்ல நடக்காத பலவற்றையும் பார்த்தீர்களா "எங்கள் தலைவர் மட்டும் இல்லையென்றால் நீங்கள் உயிர் வாழ்ந்திருக்கவே முடியாது" என்கிற ரீதியிலே பிதற்றுவதற்கு தி.மு.க தொண்டர்களாகிய உடன்பிறப்புகளை விட்டால் வேறு ஆள் இல்லை.

அந்த வகையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை உருவாக்கி வைத்தவர் தி.மு.க தலைவர் கருணாநிதி என கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் உடன்பிறப்புகள் தினுசாக புரட்டுகளை அள்ளி வீசியது பொய் என ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் தேரணிராஜன் விளக்கமளித்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக இந்தியா முழுவதும் கொரோனோ இரண்டாம் அலை கொடூரமாக வீசி வருகிறது. இதனையடுத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் டாடா, ஜிண்டால், ஆர்ச்சிலர் மிட்டர், செயில் போன்ற நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்ய தயார் என அறிவித்துள்ளனர்.

இதற்கிடையிடையில் கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் தி.மு.க'வை சேர்ந்த உடன்பிறப்புகள் "சென்னை ராஜிவ்காந்தி அரச பொது மருத்துவமனையில், அந்த மருத்துவமனைக்கு தேவையான முழு அளவிலான ஆக்ஸிஜன் தயாரிக்கும் வசதி இருக்கிறதாம். ஒரு,அரசு மருத்துவமனனக்கு சொந்தமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும். வசதி இருக்கிறது என்பது

இப்போது தான் தெரிகிறது... செய்தவர் தலைவர் கலைஞர் கருணாநிதி" என புளங்காகிதமடைந்து மீம்ஸ்'களை பறக்கவிட்டனர். போதாக்குறைக்கு திராவிட பேரரசன் கருணாநிதி இல்லையேல் நாம் இன்று மூச்சு விட கூட தெரியாமல் இருந்திருப்போம் என்கிற ரீதியில் கருத்துக்கள் வேறு.

இதனைதொடர்ந்து இன்று விளக்கமளிக்கும் வகையில் பேசிய சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன், "சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி இல்லை தனியார் நிறுவனத்திடம் இருந்துதான் தினமும் ஆக்ஸிஜன் பெறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யப்படுவதாக பரவி வரும் தகவல் தவறானது. அப்படி எந்த கட்டமைப்பும் இல்லை" என விளக்கமளித்துள்ளார்.

இப்படி சமூக வலைதளம், ஊடகம் போன்ற கட்டமைப்புகள் பலமாக உள்ள காலத்திலேயே தி.மு.க'வை பற்றி பொய்யாக உடன்பிறப்புகள் புகழ்ந்து பேசி பிழைப்பை ஓட்டும் நிலையில் இந்த கட்டமைப்புகள் இல்லாத 25 வருடங்கள் முன்பு என்னவெல்லாம் பொய் கூறி மக்களை ஏமாற்றினார்களோ என யோசிக்க தோன்றுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News