"எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பள்ளிவாசல் சென்று தொழுக அனுமதியுங்கள்" - கொரோனா காலத்திலும் அனுமதி கேட்கும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா!

எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை செய்ய அனுமதிக்க வேண்டும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு வலியுறுத்திள்ளது.
இது தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் முகமது சேக் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது,
"கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் சூழலில் தமிழக அரசு கடந்த 20'ம் தேதி புதிய கட்டுபாடுகளை அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என தமிழக அரசின் அனைத்து அறிவிப்பிற்கும் தமிழக முஸ்லிம்கள் முழுமையாக கட்டுப்பட்டு வருகின்றனர். இச்சூழலில் கொரோனா கட்டுப்பாடு என கூறி வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களின் வழிபாட்டிற்கான அனுமதியை தமிழக அரசு முழுமையாக மறுத் துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது.
குறிப்பாக ரமலான் மாதம் என்பது முஸ்லிம்களுக்கு புனித மாதம் என்பதால் இம்மாதத்திற்கென சிறப்பு வழிபாடுகள் இருக் கின்றது.எனவே, முஸ்லிம்களின் உணர்வை கருத்தில் கொண்டு வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வழிபடுவதற்கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும். மேலும் தொழுகைக்கு வருபவர்களுக்கு காயச்சல் பரிசோதனை. தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற வழிக் காட்டுதலுடன், பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.