"வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படும்.." என்ற நீதிமன்ற உத்தரவை கேட்டு கதிகலங்கிபோய் நிற்கும் உடன்பிறப்புகள்!

அ.தி.மு.க அமைச்சர் தொடர்ந்த வழக்கில் "வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை சரியாக கையாளவில்லை எனில் வாக்கு எண்ணிக்கை'யை நிறுத்தி வைக்க நேரிடும்" என தேர்தல் ஆணையம் எச்சரித்ததால் தி.மு.க'வின் உடன்பிறப்புகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிடக் கோரி, போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், "கொரோனா பரவலின் தற்போதைய நிலைக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம்" என கண்டனம் தெரிவித்தனர் மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது தடுப்பு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டும் அதை நடைமுறைப்படுத்தவில்லை என தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி தெரிவித்தனர் நீதிபதிகள்.
மேலும், "வாக்கு எண்ணிக்கையின் போது முறையான கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றாவிடில் வாக்கு எண்ணிக்கையே நிறுத்தி வைக்க நேரிடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனோ காலமானாலும் சரி, தங்கள் தலைவர் ஸ்டாலின் கொடைக்கானலில் இன்ப சுற்றுலாவில் இருந்தாலும் சரி வாக்கு எண்ணிக்கை மையத்தை கண்காணித்து வழியில் போகின்ற கண்டெய்னர் லாரியெல்லாம் துரத்திக்கொண்டு மே 2'ம் தேதிக்காக காத்திருக்கும் உடன்பிறப்புகள் நீதிமன்றத்தின் இந்த கருத்தினை கேட்டு மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.