"எங்களுக்கும் மனிதாபிமானம் இருக்குல்ல" - ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு விவகாரத்தில் விளக்கமளித்த தி.மு.க!
By : Mohan Raj
"எங்களுக்கு மனிதாபிமானம் இருக்கு அதனாலேயே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தினோம்" என்கிற ரீதியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அனைத்து கட்சி கூட்டத்தில் கொரோனோ பரவலின் தாக்கத்தை எதிர்கொள்ள ஆக்ஸிஜன் தயாரிக்க மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஸ்டெர்லைட் ஆலை தி.மு.க ஆட்சி காலத்தில் ஒப்பந்தம் போடப்பட்டு துவங்கப்பட்டு பின்னர் தி.மு.க எதிர்கட்சி வரிசைக்கு வந்தவுடன் எதிர்க்க துவங்கிய ஆலை ஆகும். இனி ஆயுளுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் என கூறிய தி.மு.க'வே தற்பொழுது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தியுள்ளது.
இது கண்டிப்பா விமர்சனத்திற்குள்ளாகும் என அறிந்த தி.மு.க தலைமை வலிய வந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது அதில் மனிதாபிமானம் மட்டுமே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவ ஆக்சிஜனின் தேவையை உணர்ந்து, மனிதாபிமான அடிப்படையிலேயே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு தற்காலிக அனுமதி மட்டுமே வழங்கப்பட வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தி.மு.க வலியுறுத்தியது.
தமிழ்நாட்டின் தேவைக்குப் பிறகே பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படவேண்டும்; பொதுமக்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள், போராட்ட அமைப்பினர் அடங்கிய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது.
தமிழகத்தின் முழுத் தேவையை நிறைவேற்றிய பிறகு பிற மாநிலங்களுக்கு அளித்திடுவதே சரியான வழிமுறையாகும். இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் உடனடியாகத் தமிழக காபந்து அரசின் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
தி.மு.க அரசு அமைந்ததும், தற்காலிக அனுமதிக் காலம் முடிந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக சீல் வைக்கப்படும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பொழுதெல்லாம் தி.மு.க'வின் அரசியலை மக்கள் எளிதாக புரிந்துகொள்கின்றனர். முன்பு போல் எதையும் தி.மு.க'வால் திரித்து கூற இயலவில்லை எனவே மக்கள் கேள்வி கேட்கும் முன் ஓர் அறிக்கையை வெளியிட்டுவிடுகிறது தி.மு.க