"இப்படித்தான் ஓட்டு எண்ணணும்" - தேர்தல் ஆணையத்திடம் அடம்பிடிக்கும் தி.மு.க!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6'ம் தேதி நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே இரண்டாம் தேதி நடைபெறவுள்ளது. மற்ற கட்சிகளை விட தி.மு.க ஒருமடங்கு மேலே சென்று வாக்கு எண்ணிக்கை இப்படித்தான் நடக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.
தலைமை தேர்தல் அதிகாரிக்கு தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார். அதில், "தபால் வாக்குகள் குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவதால் அதற்கு ஒரு தெளிவான வழிகாட்டுதலை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தேர்தல் ஆணையம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதேபோல அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் அந்த வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும்" எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மற்ற கட்சிகள் தேர்தலை முடித்துவிட்டு தத்தம் வேலைகளில் கவனமாக இருக்கும்போது தி.மு.க மட்டும் ஆரம்பம் முதல் தினம் ஒரு புகார், விண்ணப்பம், கடிதம் என தேர்தல் ஆணையத்திடம் மல்லுக்கட்டி வருகிறது. மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் இருந்து இதுவரையில் எந்த பதிலும் வரவில்லை.