கருணாநிதி சமாதியில் வணங்கிய ஸ்டாலின் - மன்னிப்பா? அல்லது ஆசிர்வதமா? இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்!

நேற்று இரவு தி.மு.க தலைவர் ஸ்டாலின் மறைந்த தி.மு.க தலைவரும், ஸ்டாலின் தகப்பனுமாகிய கருணாநிதியின் சமாதி சென்று வணங்கினார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக மறைந்தார். அதன்பின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பை கைப்பற்றினார். அதன் பிறகு தி.மு.க ஸ்டாலின் தலைமையில் சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் இது. கடந்த ஏப்ரல் 6'ம் தேதி தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தலை நடத்தி முடித்தது. இதன் முடிவுகள் இன்று வெளியாகவிருக்கும் நிலையில் நேற்று இரவு தி.மு.க தலைவர் ஸ்டாலின் தன் குடும்பத்தாருடன் சகிதமாக மெரினா'வில் கருணாநிதியின் சமாதியில் சென்று வணங்கினார்.
இது தேர்தல் முடிவுகளுக்காகவே என தி.மு.க தரப்பே கூறி வரும் நிலையில் அது வெற்றிக்கான ஆசிர்வாதமா அல்லது தோல்விக்கான மன்னிப்பா என என இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.