திமுக, அதிமுக இடையே குறைவான சதவீத வாக்குகள்தான் வித்தியாசம் - தோல்வியை கண்டு அஞ்சாத அ.தி.மு.க-வினர்!

நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் திமுக 37.70% வாக்குகளை பெற்று ஆட்சியமைக்க உள்ளது.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, 133 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் தேர்தலில் திமுகவை விட 4.41 சதவிதம் வாக்குகள் மட்டுமே அதிமுக குறைவாக பெற்றுள்ளது.
அதிமுக 33.29%வாக்குகளை பெற்று, பலம் வாய்ந்த எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது. இததுவே 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 136 இடங்களிலும், திமுக கூட்டணி 98 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்தத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவிதத்திற்கும், திமுக கூட்டணியின் வாக்கு சதவிதத்திற்கும் இடையே அதிக வாக்குகள் வித்தியாசம் இருந்தது.
அதிமுக 40.88%வாக்குகளை பெற்றிருந்த நிலையில், திமுக 31.39%வாக்குகளை மட்டுமே பெற்றது. திமுக, அதிமுக இடையே வாக்குவித்தியாசம் அதிக அளவில் இருந்தன.
தற்போது 4.41 சதவிதம் வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று தோல்வியை தழுவி உள்ளதால், அடுத்த தேர்தலில் தவறவிட்ட குறைகளை கண்டுபிடித்து மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், செயலாற்றி வருவதாக அக்கட்சியினர் கூறியுள்ளனர்.