Kathir News
Begin typing your search above and press return to search.

இன்று மாலை கூடுகிறது தி.மு.க எம்.ஏல்.ஏக்கள் கூட்டம் - ஸ்டாலின் முதல்வராக ஒருமனதாக தேர்வு!

இன்று மாலை கூடுகிறது தி.மு.க எம்.ஏல்.ஏக்கள் கூட்டம் - ஸ்டாலின் முதல்வராக ஒருமனதாக தேர்வு!

Mohan RajBy : Mohan Raj

  |  4 May 2021 2:45 AM GMT

தி.மு.கவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தி.மு.க'வின் எம்.எல்.ஏ'க்களை இன்று மாலை கூட்டத்திற்கு அழைத்துள்ளார். அதில் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் 7ம் தேதி மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார்.

தமிழக சட்டப்பேரவைக்கு 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்டாலின் 4'ம் தேதி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் என்று அறிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் வெற்றி பெற்ற தி.மு.க எம்.எல்.ஏ'க்களின் கூட்டம் நடைபெறுகிறது.இக்கூட்டத்தில் ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக ஒருமனத்துடன் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

எம்.எல்.ஏ'க்களால் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்துடன் ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார். அதன்பின் ஆளுநர் வரும் 7'ம் தேதி ஸ்டாலினுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News