Kathir News
Begin typing your search above and press return to search.

நாகை மாவட்டத்தில் அடித்து நொறுக்கப்பட்ட 'அம்மா மினி கிளினிக்' - தொடரும் அராஜகம்!

நாகை மாவட்டத்தில் அடித்து நொறுக்கப்பட்ட அம்மா மினி கிளினிக் - தொடரும் அராஜகம்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  5 May 2021 10:15 AM IST

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு தினங்கள் ஆகின்றன. அ.தி.மு.க அரசை தேர்தலில் வீழ்த்தி தி.மு.க ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனைதொடர்ந்து தமிழகத்தில் சில காட்சிகள் அரங்கேறி வருகின்றன. நேற்று சென்னை ஜெ.ஜெ நகரில் 'அம்மா' உணவகம் தி.மு.க'வினரால் அடித்து நொறுக்கப்பட்டது.

ஏன் ஸ்டாலின் படத்தை வைக்கவில்லை என தி.மு.க'வினர் 'அம்மா' உணவகத்தை அடித்து நொறுக்கினர். அதன் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து உடனே தி.மு.க அங்கு பிரச்சனை செய்த இருவரையும் தற்காலிக நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் "எளியோர்கள் சாப்பிடும் உணவகத்தை அடித்து நொறுக்குவது அராஜகம்" என கண்டன குரல்கள் எழுந்தன.

இதன் பின நேற்று இரவு நாகை மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் அவரிக்காடு கிராமத்தில் இரவோடு இரவாக 'அம்மா மினி கிளினிக்' அடித்து உடைக்கப்பட்டுள்ளது. அதன் வாசலில் உள்ள பெயர் பலகைகள் அடித்து உடைக்கப்பட்டு, வாயிற் கதவுகள் நொறுக்கப்பட்டுள்ளன. இரவோடு இரவாக இந்த அட்டூழியம் நடந்தேறியுள்ளது.


கிராமங்களில் மருத்துவமனை இல்லாத இடங்களில் முதலுதவிக்கு மக்களுக்கு பயன்படும் என்றுதான் கடந்த ஆட்சியில் அ.தி.மு.க அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது. இதனை அடித்து நொறுக்க வேண்டிய காரணம் என்ன என்பது குறித்து அங்கு விசாரணை நடந்து வருகிறது.


இப்படி அ.தி.மு.க அரசுகள் அமல் படுத்திய திட்டங்கள் அனைத்தையும் அடித்து உடைக்க வேண்டிய காரணம் என்ன என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News