Kathir News
Begin typing your search above and press return to search.

அம்பு நம்மை நோக்கியே பாய்கிறது அமைச்சரே! கடந்த ஆண்டு சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?

அம்பு நம்மை நோக்கியே பாய்கிறது அமைச்சரே! கடந்த ஆண்டு சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?

MuruganandhamBy : Muruganandham

  |  8 May 2021 1:00 AM GMT

மளிகை, காய்கறி கடைகளைத் தவிர வேறு எந்த கடைகளையும் திறக்கக்கூடாது என்று ஆணையிட்ட தமிழக அரசு, மதுவை மட்டும் அத்தியாவசியப் பொருளாக கருதியோ, என்னவோ மதுக்கடைகளை காலை 8.00 மணிக்கே திறக்க அனுமதித்திருக்கிறது. பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் என கருதமாட்டார்கள்.

இந்த முடிவு கொரோனா பரவலைத் தடுப்ப்பதற்கு பதிலாக அதிகரிப்பதற்கே வழி வகுக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மது வணிக நேரத்தை குறைப்பதாகக் கூறுவதெல்லாம் ஏமாற்று வேலை. தமிழகத்தில் மதுக்கடைகள் தினமும் 10 மணி நேரம் திறந்திருந்தாலும், 3 மணி நேரம் மட்டுமே திறந்திருந்தாலும் விற்பனை குறையாது.

மதுக்கடைகளுக்கு இரு நாள் விடுமுறை விடப்பட்டால் அதற்கு முந்தைய நாளில் வணிகம் மும்மடங்கு அதிகரிப்பதும், ஒரு நாள் விடுமுறை விடப்பட்டால் அதற்கு முந்தைய நாளில் மது வணிகம் இரு மடங்கு அதிகரிப்பதும் இந்த சூத்திரத்தின் அடிப்படையிலானதுதான்.

தமிழகத்தில் இப்போது மது வணிக நேரம் 9 மணியிலிருந்து 4 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்றாலும் விற்பனை குறையாது. மாறாக, 9 மணி நேரத்தில் மது வாங்குபவர்கள் அனைவரும் 4 மணி நேரத்தில் குவிந்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்வர் என்பதால் மதுக்கடைகள் கொரோனா பரவல் மையங்களாக மாறும்.

கடந்த ஆண்டு சென்னையில் தமது வீட்டுக்கு முன்பாக, "அடித்தட்டு மக்களுக்கு ஐந்தாயிரம் வழங்கு. கொரோனா காலத்தில் டாஸ்மாக் எதற்கு?" என்ற பதாகையை ஏந்தி போராட்டம் நடத்திய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர், இன்று முதல்வராகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உடனடியாக மதுக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News