"முத்துக்கு முத்தாக!" - தம்பி முதல்வர் ஆனவுடன் முடிவுக்கு வந்த பாசப்போராட்டம்!
By : Mohan Raj
சண்டையிட்டு நீயா? நானா? என்றிருந்த அண்ணன், தம்பி பாசப்போராட்டம் தம்பி ஆட்சிக்கு வந்தவுடன் முடிவுக்கு வந்துள்ளது.
முன்னாள் மத்திய மந்திரியும் தி.மு.க.வின் தென் மண்டல அமைப்பு செயலாளராகவும் இருந்தவர் மு.க.அழகிரி. இவர் கருணாநிதியின் மூத்த மகனும், தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் அண்ணனும் ஆவார். இவருக்கும் ஸ்டாலிடனுக்கும் ஆகவே ஆகாது. "இவர் எப்படி முதல்வர் ஆவார?" என அழகிரியும், "இவரை கட்சிக்குள் சேர்க்காதீர்கள்" என ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் எதிர்த்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் தற்பொழுது ஸ்டாலின் முதல்வர் ஆன பின்பு அண்ணா, தம்பி என பாசமழை பொழிந்து வருகின்றனர். "என் தம்பி முதல்வர் ஆனது எனக்கு பெருமையே என அழகிரியும், ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அழகிரி மகன் துரை தயாநிதியும், ஸ்டாலின் மகன் உதயநிதியும் கட்டி ஆரத்தழுவி கொண்டனர்.
தற்பொழுது மதுரை மாநகர் முழுவதும் 'முத்துக்கு முத்தாக' பாடலை போலவே அண்ணன், தம்பி பாசபிணைப்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதே ஸ்டாலின் முதல்வர் ஆகாமல் போயிருந்தால் கூட இந்தளவிற்கு பாசப் பிணைப்பு நடக்குமா என தெரியவில்லை, தம்பி முதல்வர் என்றவுடனே அண்ணன் பாசத்தில் நெளிகிறார் என உடன்பிறப்புகளே கூறி வருகின்றனர்.
அழகிரியின் மன மாற்றத்தால் மதுரையில் அவரது ஆதரவாளர்களும் உற்சாகமாக காணப்படுகிறார்கள். எனவே வருகிற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக மதுரை தி.மு.க'வில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்றும் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.