Kathir News
Begin typing your search above and press return to search.

"கண்டா வரச்சொல்லுங்க! விஜயபாஸ்கர கையோடு கூட்டி வாருங்க!" - நிலைமை கைமீறி சென்றதால் விஜயபாஸ்கரை அழைத்த தி.மு.க!

கண்டா வரச்சொல்லுங்க! விஜயபாஸ்கர கையோடு கூட்டி வாருங்க! - நிலைமை கைமீறி சென்றதால் விஜயபாஸ்கரை அழைத்த தி.மு.க!
X

Mohan RajBy : Mohan Raj

  |  17 May 2021 5:30 AM GMT

கொரோனோ இரண்டாம் அலை நாடு முழுவதும் கொடிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இரண்டாம் அலை பல மரணங்களை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனைகளில் வரிசையில் மக்கள் நிற்கின்றனர், தடுப்பூசி வாங்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர், சுடுகாட்டில் தகனம் செய்வதற்கு வரிசையில் நிற்கின்றனர். இப்படி தமிழகம் இதுவரை இல்லாத அளவிற்கு கொடிய பாதிப்பை இந்த காலத்தில் கொரோனோ இரண்டாம் அலையால் சந்தித்து வருகிறது.

முதல் அலையில் இருந்து குறைந்த பாதிப்பில் தப்பித்த தமிழகம் இரண்டாம் வேற்றுமை அலையில் நிறைய மரணங்களையும், போதிய அளவு மருந்து இல்லை என்ற அவல நிலையையும், படுக்கை வசதிகள் கூட இல்லை என்ற கொடூர நிலையையும் எதிர்கொண்டு வருவதை நம் கண்கூடாக பார்க்க முடிகிறது.

இந்த இரண்டு கொரோனோ அலை காலகட்டத்திற்கும் தமிழகத்தில் ஓர் வித்தியாசம் உண்டு. அது ஆட்சி மாற்றம் கடந்த முதல் கொரோனோ காலகட்டத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி பீடத்தில் இருந்தது. முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் ஆகியோர் பதவியில் இருந்து சிறப்பாக கொரோனோ

பேரிடர் நிலையை கையாண்டனர். அதிலும் விஜயபாஸ்கர் ஓர் மருத்துவர் என்பது கடந்த அ.தி.மு.க அரசிற்கு கூடுதல் பலம். மருத்துவமனை வசதி குறித்து திட்டமிடல், மாவட்ட வாரியாக ஆய்வு, படுக்கை வசதிகளை சிறப்பாக திட்டமிட்டு நோயாளிகள் கூட்டமாக வரும் சமயத்தில் சிறப்பாக கையாண்ட விதம், நோயாளிகளுக்கு சத்தான சாப்பாடு மற்றும் தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு மருத்துவராக இருந்த காரணத்தினால் சுலபமாக புரிந்துகொண்டு இக்கட்டான சமயத்தில் சிறப்பாக கையாண்டார்.

தற்பொழுது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளது. முதல்வராக ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் பொறுப்பேற்று உள்ளனர். தற்பொழுது கொரோனோ இரண்டாம் அலையால் மக்கள் செத்து மடியும் காலகட்டத்தில் தமிழகத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு, படுக்கை வசதிகள் கையிருப்பு, மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற மனித வள வசதிகள் பற்றிய தகவல் ஆகியவற்றை நோய் தொற்றின் வீரியம் அறிந்து முன்கூட்டியை நடவடிக்கை எடுக்க தி.மு.க அரசு தவறிவிட்டது.

இதன் விளைவாக தினசரி 30 ஆயிரம் கொரோனோ நோயாளிகள் புதிதாக பாதிக்கப்படும் அளவிற்கு மோசமாக சென்று கொண்டிருக்கிறது. சுடுகாட்டில் பிணங்களை எரியூட்ட ஆன்லைன் பதிவு முறையை அமல் படுத்தியதிலிருந்தே தி.மு.க அரசின் கையாலாகாததனம் கொரோனோ நடவடிக்கையில் வெளிவந்துவிட்டது.

இதனை வெளிகாட்டிக்கொள்ளாமல் சமாளிக்கும் விதமாக நேற்று தி.மு.க அரசு சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாஜி சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கரின் உதவியை நாடும் விதமாக ஒரு குழு நியமித்து அவரை அந்த குழுவில் நியமித்துள்ளது தி.மு.க அரசு.




அந்த அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டம் 13.05.2021 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாக பின்வரும் தீர்மானம் (தீர்மானம் எண்.4) நிறைவேற்றப்பட்டது.

""நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது"

2. மேலே தெரிவிக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அனைத்து சட்டமன்ற கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் பின்வரும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு

அமைக்கப்படுகிறது" என்ற அறிவிப்பும் அந்த குழுவில் அ.தி.மு.க சார்பாக டாக்டர்.விஜயபாஸ்கர், பா.ஜ.க சார்பில் நயினார் நாகேந்திரன், தி.மு.க சார்பில் டாக்டர்.எழிலன் உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது இப்படி குழுவை அமைப்பது மூலமாக கடந்த ஆட்சிகாலத்தில் கொரோனோ எவ்வாறு சிறப்பாக கையாளப்பட்டதோ அதுபோல் தற்பொழுதும் நடவடிக்கை எடுக்க மாஜி சுகாதாரத்துறை அமைச்சர் யுக்திகள் தி.மு.க அரசிற்கு தேவைப்படுவதாக தெரிகிறது. எப்படி இருந்தால் என்ன மக்கள் பேரிடர் காலத்தில் பிழைத்தால் சரி!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News