Kathir News
Begin typing your search above and press return to search.

"நான் யார் தெரியுமா?" என பாதுகாப்பு அதிகாரியை மிரட்டிய எம்.எல்.ஏ எழிலன் - விதிமுறைகளை மீறியதை தட்டி கேட்டதால் ஆத்திரம்!

நான் யார் தெரியுமா? என பாதுகாப்பு அதிகாரியை மிரட்டிய எம்.எல்.ஏ எழிலன் - விதிமுறைகளை மீறியதை தட்டி கேட்டதால் ஆத்திரம்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  18 May 2021 2:45 AM GMT

கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல், அதிகாரம் செய்ய இயலாமல் வறண்டு இருந்த தி.மு.க தற்பொழுது ஆட்சிக்கு வந்தவுடன் கண்ணில் படுபவர்களை எல்லாம் மிரட்டி வருகிறது, குறிப்பாக அரசு அதிகாரிகளை, காவல் துறை அதிகாரிகளை சகட்டு மேனிக்கு மிரட்டி வருகிறது.

அந்த வகையில் நேற்று முதலமைச்சர் ஸ்டாலினின் கார் புறப்படும் நேரத்தில் பாதுகாப்பு நடைமுறைகளை மீறி உள்ளே வந்த சென்னை ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ எழிலனைக் காவல்துறை உதவி ஆணையர் கொடிலிங்கம் தடுத்து நிறுத்தினார்.


அதனை மீறி முதலமைச்சரின் கான்வாய் அருகே சென்றுவிட்டுத் திரும்பிய எம்.எல்.ஏ எழிலன், தான் யார் தெரியுமா என்று கேட்டுக் காவல் உதவி ஆணையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது. நேற்று மாலை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தனது இல்லத்திற்குப் புறப்பட ஸ்டாலின் தயாராக இருந்தார்.

இதற்காக முதலமைச்சரின் கான்வாய் அலர்ட் செய்யப்பட்ட நிலையில், திடீரெனச் சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், முதலமைச்சருக்கான பாதுகாப்பு நடைமுறைகளை மீறி கான்வாய் இருக்கம் பகுதிக்கு உள்ளே நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு நடைமுறைகளின் படி முதலமைச்சரின் கான்வாய் இருக்கும் பகுதிக்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்பதால், எம்எல்ஏ எழிலனை அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டுருந்த உதவி ஆணையர் கொடி லிங்கம், தடுத்து நிறுத்தி நீங்கள். உள்ளே செல்லக்கூடாது என்று தடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த கோபமடைந்த எம்.எல்.ஏ எழிவன் உதவி ஆணையர் தடுத்து நிறுத்தியதையும் பொருட்படுத்தாமல் தான் யார் என்று தெரியுமா என்று கேட்டபடியே முதலமைச்சர் மஸ்டாவின் கார் அருகே சென்றுள்ளார். பிறகு முதலமைச்சர் அங்கிருந்து புறப்பட்ட பிறகு வேகமாக காவலர்கள் இருக்கும் பகுதிக்கு வந்த எம்.எல்.ஏ எழிலன் யார் அது, என்னைப் பார்த்து யார் நீ எனக் கேட்டது எனக் குரலை உயர்த்திக் கேட்டுள்ளார்.

அதற்குத் தான் தான் கேட்டதாகக் கூறி காவல் உதவி ஆணையர் கொடிலிங்கம் அங்கு வந்தார். அப்போது எம்.எல்.ஏ'வான என்னை எப்படி யார் என்று கேட்பீர்கள், மரியாதையோடு நடந்துகொள்ளுங்கள் என மீண்டும். குரலை உயர்த்திப் பேசியுள்ளார் எழிலன், இதனால் தலைமை செயலகம் காவலர்கள் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Source - Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News