Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனோ மரண குறித்த விவரங்களில் நேர்மை வேண்டும் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் குட்டு!

கொரோனோ மரண குறித்த விவரங்களில் நேர்மை வேண்டும் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் குட்டு!
X

Mohan RajBy : Mohan Raj

  |  18 May 2021 2:45 AM GMT

"கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் போன்ற விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும்" என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.

படுக்கை எண்ணிக்கைகளை அதிகரிப்பது, ஆக்சிஜன் சப்ளை, ரெம்டெசிவிர் மருந்தை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பது குறித்த விபரங்கள் கொண்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதனை தொடர்ந்து வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது வழக்கறிஞர்கள், "கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும், ஊரடங்கு அமலில் உள்ள போது வாகனங்களில் சாலைகளில் ஏராளமானோர் சுற்றித் திரிவதாகவும், குழந்தைகள் விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும்" வாதத்தை நீதிபதி முன்வைத்தனர்.

பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீதிமன்ற வளாகங்களை கொரோனா சிகிச்சை மையங்களாகவோ, தடுப்பூசி மையங்களாகவோ பதன்படுத்திக் கொள்ளலாம் என அரசுக்கு யோசனை தெரிவித்தனர். மேலும், கொரோனா மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், அப்போது தான் எதிர்காலத்தில் ஆக்சிஜன், மருந்து பெற உதவியாக இருக்கும் என சுட்டிக்காட்டினர்.

இறுதியாக இறந்தவர்கள் உடலையும், உறவினர்களையும் கண்ணியமாக நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசை அறிவுறுத்தினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News