தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மூச்சுதிணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

By : Mohan Raj
விஜயகாந்துக்கு மூச்சு திணறல் மருத்துவமனையில் அனுமதி. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் ஏற்பட்ட காரணத்தால், அதிகாலை 3.30 மணிக்கு அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன், உடல்நலக் குறைவால், சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்தே, விஜயகாந்த் வீட்டிலேயே இருந்து வருகிறார். பொது நிகழ்ச்சிகளில், பங்கேற்பது இல்லை.
கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது, அவருக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலம் பெற்றிருந்தார். மேலும் அவர் முன்பு போல் உடல் நலமாக இல்லாமல் சற்று ஆரோக்கிய குறைவாகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ரசிகர்களும், தொண்டர்களும் "எங்கள் கேப்டன் மீண்டு வருவார்" என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
