அவரை விட யாராவது கட்சியில் வளர்ந்துவிட்டால், முடித்துக்கட்டி விடுவார் - பினராயி விஜயனின் முகத்திரையை கிழித்த பத்திரிக்கையாளர்!
By : Muruganandham
கேரளாவின் மூத்த அரசியல் பத்திரிகையாளர் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு முரணான ஒரு நபராக பினராயி விஜயன் தன்னை காட்டிக்கொண்டு வருகிறார்.
தன்னை மதச்சார்பற்றவர் என்று முன்வைக்க பினராயி விரும்புகிறார். ஆனால், அவரின் செயல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் அமைச்சர்களை அவர் புறம்தள்ள விரும்புகிறார்" என்றுள்ளார்.
கேரள முன்னாள் முதலமைச்சரும், மூத்த சிபிஐ தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன். இப்போது 98 வயதாக இருக்கும் அச்சுதானந்தன், 2006 மற்றும் 2011 க்கு இடையில் கேரள முதல்வராக இருந்தபோது, அந்த நேரத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த விஜயன் ஒரு புயலைக் கிளப்பினார்.
அது அச்சுதானந்தன் தலைமையை கேள்வி எழுப்பியது தான். வயது மூப்பையும், நீண்ட நாட்களாக பதவியில் இருந்து வருவதையும் பினராயி கேள்வி எழுப்பி அச்சுதானந்தனின் தலைமையை அவர் தொடர்ந்து பலவீனப்படுத்தி வந்தார்.
கடைசியில் பினராயி விஜயனே வென்றார். 2016-ல் சிபிஎம் வென்ற பிறகு அச்சுதானந்தனுக்கு பதவி மறுக்கப்பட்டது. இறுதியாக பினராயி முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
முதலமைச்சரின் அலுவலகத்திற்குள் நுழைந்தபோது அச்சுதானந்தனையும் அவரது ஆதரவாளர்களையும் ஓரங்கட்டினார். இப்போதும் அதேபோல் ஒரு நிலைமை ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக பினராயி விஜயன் திட்டமிட்டு முன்கூட்டியே ஓரம்கட்டும் வேலையை துவங்கி இருக்கிறார் என சந்தேகிக்கிறார்கள்
அதற்கேற்ப தாமஸ் ஐசக் மற்றும் கே.கே. ஷைலாஜா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரங்கட்டப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளைவிட, கே.கே. ஷைலஜாவுக்கு அமைச்சரவை இடம் மறுக்கப்படுவது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவு கேரளாவைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தேசிய கட்சியான சிபிஎம் மீது மோசமாக பிரதிபலிப்பதாக எழுத்தாளர் மலையரசு கூறியுள்ளார்.