தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்துவதில் தி.மு.க அரசு திணறுகிறதா?

தமிழகத்தில் கொரோனோ தொற்று மிக கடுமையாக அதிகமாகி வரும் நிலையில் கடந்த 18'ம் தேதி ஒருநாளில் மட்டும் முகக்கவசம் அணியாதது மற்றும் தனிமனித இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 21004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொரோனோ இரண்டாம் அலை நாட்டில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்திய அளவில் முதல் மூன்று இடங்களில் இருந்த தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது. அந்த அளவிற்கு கொரோனோ தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. ஊரடங்கு அமலில் இருப்பினும் மக்கள் அதனை சரிவராத கடைபிடிக்காத காரணத்தினால் தொற்று அதிகமாகி வருகிறது.
உதாரணமாக கடந்த 18'ம் தேதி ஒருநாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 21,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 19,252 வழக்குகளும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது 1,752 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாததற்காக தென்மண்டலத்தில் அதிகபட்சமாக 5,542 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை அபராதமாக சுமார் 22 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னதான் ஊரடங்கு அமல்படுத்தினாலும் மக்கள் விழிப்புணர்வு இல்லையெனில் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என சுகாதாரதுறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.