Kathir News
Begin typing your search above and press return to search.

"கொரோனோ இல்லாத நாளே மகிழ்ச்சியான நாள்" - வெதும்பும் 'சிக்ஸர்' புகழ் ஸ்டாலின்!

கொரோனோ இல்லாத நாளே மகிழ்ச்சியான நாள் - வெதும்பும் சிக்ஸர் புகழ் ஸ்டாலின்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  22 May 2021 8:15 AM IST

தமிழகத்தில் கொரோனோ இரண்டாம் அலை மிகப்பெரிய விஸ்வரூபத்துடன் பரவி வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தி 13 நாட்கள் ஆகியும் தினமும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றதே தவிர குறைந்தபாடில்லை. அந்த வகையில் இதுவரை எதிர்கட்சியாக இருந்த தி.மு.க தற்பொழுது ஆளும்கட்சியாக கடந்த தேர்தலில் வென்று பொறுப்பேற்றுள்ளது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி வகிக்கிறார்.

என்னதான் ஊடகங்கள் தமிழகத்தில் முதல்வர் பம்பரமாக சுழல்கிறார், சிக்ஸராக அடிக்கிறார், அதிரடி அறிவிப்புகளால் மாஸ் காட்டுகிறார் என போலியாக ஸ்டாலினை சித்தரித்தாலும் இவை அனைத்தும் பொய் என தினசரி உயரும் கொரோனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை அப்பட்டமாக காட்டி கொடுத்துவிடுகிறது.

கொரோனோ தொற்றை குறைக்க ஊரடங்கை அமல் படுத்தி அதனை சரிவர கையாளாத காரத்தினால் கடந்த 15 நாட்களில் கொரோனோ தொற்று உயருகிறதே தவிர குறைந்த பாடில்லை, இதனை மெல்ல மக்களும், ஆளும்கட்சி, எதிர்கட்சியினரும் உணர்ந்து அதற்கு தகுந்தாற்போல் அறிக்கைகளை விட துவங்கிவிட்டனர்.


அந்த வகையில் நேற்று திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ஆட்சிக்கு வந்த நாளைவிடவும் தமிழகத்தில் கொரானா வைரஸ் இல்லாத நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள்" என முக்கியமாக கூறியுள்ளார்.

தான் பத்து ஆண்டுகளாக எதிர்கட்சி வரிசையில் அமர்ந்த நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததை இதுவரை மகிழ்ச்சியாக எண்ணிக்கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் தற்பொழுது'தான் கொரோனோ தொற்றில் வீரிய நிலையை உணர்ந்திருக்கிறார்.

இதன் காரணமாகவே "கொரோனோ இல்லாத நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள்" என மனம் வெதும்பி செய்தியாளர்கள் முன் கூறியிருக்கிறார். என்னதான் ஊடகங்கள் ஸ்டாலின் ஆட்சியை நொடிக்கு நொடி புகழ்ந்தாலும் அது உண்மையில்லை கள நிலவரம் வேறு என்று நேற்றைய முதல்வரின் வார்த்தைகள் வெளிப்படுத்தியுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News