Kathir News
Begin typing your search above and press return to search.

ஏழுவர் விடுதலையில் மாநில அரசிடம் அதிகாரம் இருக்க ஆளுநர் ஏன்? ஸ்டாலினை விளாசிய சீமான்!

ஏழுவர் விடுதலையில் மாநில அரசிடம் அதிகாரம் இருக்க ஆளுநர் ஏன்? ஸ்டாலினை விளாசிய சீமான்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  22 May 2021 1:30 PM IST

"ஏழுவர் விடுதலையில் மாநில அரசிற்கே அதிகாரம் இருக்கும் பட்சத்தில் ஏன் ஆளுநரிடம் தி.மு.க அரசு செல்ல வேண்டும்? மாநில தன்னாட்சியை காவு குடுக்கிறதா தி.மு.க" என ஏழுவர் விடுதலை தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்டுள்ள அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 30 ஆண்டுகளாகச் சிறைக் கொட்டடியில் வாடும் ஏழு தமிழர்களை விடுவிக்கக்கோரி குடியரசுத் தலைவருக்குக் கடிதமெழுதியிருக்கும் தமிழக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. எழுவரையும் விடுவிக்க மனமில்லாத தமிழக ஆளுநர் அமைச்சரவைத் தீர்மானத்திற்கு ஒப்புதல் தர மறுத்து விடுதலைக்கு முட்டுக்கட்டை போடவும். காலம் தாழ்த்தவுமாகக் கூறிய. 'குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரமிருக்கிறது' எனும் மோசடி வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கடிதமெழுதி விடுதலையைக் கோரும் திமுக அரசின் செயல். மாநில உரிமையை மத்திய அரசிடம் பரிகொடுக்கும் செயலாகும்.


இராஜீவ் காந்தியோடு இறந்துபோனவர்களின் குடும்பத்தினர் விடுதலைக்கெதிராகத் தொடுத்த வழக்கு. சி.பி.ஐ.யின் பல்நோக்கு விசாரணை நிறைவடையாமை எனப் பல்வேறு விவகாரங்களைக் காரணமாகக் காட்டி, ஒப்புதல் தர மறுத்த ஆளுநர் இறுதியாகத்தான். தமக்கு அதிகாரமில்லை என்றுகூறி, குடியரசுத்தலைவர் பக்கம் மடைமாற்றிவிட்டு இந்த மோசடித்தனத்தை அரங்கேற்றுகிறார். இதனை தமிழக அரசு. ஒருபோதும் அங்கீகரிக்கவோ. ஆதரவளிக்கவோ கூடாது என்பதே நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு.


எழுவரையும் விடுவிக்க மாநில அரசுக்கு முழு அதிகாரமிருக்கிறது எனப் பல வழக்குகளில் உச்ச நீதிமன்றமே தெளிவாக வரையறுத்து வழிகாட்டியிருக்கும் நிலையில். எழுவர் விடுதலைக்கு உத்தரவிட்டு மாநிலத்தின் தன்னுரிமையை நிலைநாட்ட வேண்டிய தமிழக அரசு. ஆளுநரின் கூற்றை முழுமையாக ஏற்றுக்கொண்டது போல குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதியிருப்பது, மாநிலத் தன்னாட்சி உரிமையைக் காவு கொடுக்கும் கொடுஞ்செயலாகும். 30 ஆண்டுகாலச் சிறைக் கொடுமைகளுக்கு விடிவு கிடைக்குமெனப் பெரிதும் எதிர்பார்த்திருந்த வேளையில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் தமிழர்களுக்கெதிரான நிலைப்பாட்டை முழுமையாக அடியொற்றுவது போல, தங்கள் கைகளிலிருக்கும் விடுதலையைக் கைமாற்றிவிட்டு குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதியிருப்பது மிகப்பெரிய ஏமாற்றுவாதமாகும்.


161வது சட்டப்பிரிவின்படி, எழுவரையும் விடுவிக்கத் தங்களுக்கு உரிமையிருக்கிறது என்பதை நிலைநாட்ட வேண்டிய தமிழக அரசு குடியரசுத்தலைவரிடம் கடிதமெழுதி வேண்டுகோள் வைப்பது மாநில அரசுக்கிருக்கும் அதிகாரத்தைத் தாரைவார்ப்பதற்கு ஒப்பாகும். 'நாங்கள் அண்ணாவின் தம்பிகள்' என முழங்கும் ஐயா ஸ்டாலின் அவர்கள் மாநில உரிமைகளைப் பறிகொடுக்கும் இத்தகைய வரலாற்றுப்பெருந்தவறை செய்ய முன்வரலாமா? 161வது சட்டப்பிரிவு எனும் பொன்னான வாய்ப்பிருக்கும்போது எதற்காகக் குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுவதும் வெற்று நடவடிக்கை?


ஆகவே, தங்களுக்கிருக்கும் 161வது சட்டப்பிரிவு எனும் வலிமையான அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டுமொருமுறை அமைச்சரவையைக் கூட்டி, முந்தைய அரசின் 09.09.2018 அமைச்சரவை முடிவை புறம்தள்ளும் அளுநரை கண்டித்தும், அதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், இந்த இடைபட்ட காலத்தில் Tamil Nadu Suspension of Sentence Rule 1982, சட்டத்தின் விதி 40-ஐ பயன்படுத்தி, மாநில அரசாங்கத்தின் சிறப்பு அதிகாரமான விடுப்பு அளிக்கும் உரிமையில் எழுவருக்கும் காலவரையற்ற விடுப்பு வழங்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News